பிக் பாஸ் இறுதிப் போட்டியாளர்களுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா.! முதல் மூன்று இடத்தில் இருக்கும் இவர்களுக்கு இத்தனை லட்சம் சம்பளமா வாய்ப்பிளக்கும் சக போட்டியாளர்கள்.

0
bigg-boss-6
bigg-boss-6

பிக் பாஸ் ஆறாவது சீசன் கடந்த வருடம் ஆரம்பித்து மிகவும் கோலாகலமாக நடைபெற்று வந்தது இதற்கு முன்பு ஒளிபரப்பப்பட்ட ஐந்து சீசன்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது அதனால் இந்த ஆறாவது சீசனும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தது இன்னும் சில நிமிடங்களில் கிரான்ட் ஃபின்னாலே நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

அதேபோல் பிக் பாஸ் ஆறாவது சீசனையும் கமல்தான் தொகுத்து வழங்கி வந்தார் இன்று இறுதியை எட்டி விட்டது என்பதால் உலகநாயகன் கமலஹாசன் டைட்டில் வின்னர் யார் என்பதை இன்று அறிவிப்பார். அதேபோல் இறுதி போட்டியாளருக்கு 50 லட்சம் ரூபாய் பரிசாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற போட்டியாளரான விக்ரமன் சிவின் மற்றும் அசீம் ஆகிய மூவருக்கும் சம்பளம் எவ்வளவு என்பது தற்பொழுது தெரியவந்துள்ளது. இதில் விக்கிரமனுக்கு தினமும் 18 ஆயிரம் ரூபாய் சம்பளம் என்று கூறப்பட்ட நிலையில் இதுவரை 105 நாட்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்துள்ளார் அதனால் இவர் சுமார் 18 லட்ச ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டிருக்கலாம் என தகவல் கிடைத்துள்ளது.

இவரைத் தொடர்ந்து சிவின்  அவர்களுக்கும் 18 ஆயிரம் ரூபாய் சம்பளமாக பேசப்பட்டதால் இவரும் 105 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்துள்ளதால் 18 லட்சம் ரூபாய் சம்பளமாக பெற்றிருக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது ஆனால் அசிமுக்கு ஒரு நாளைக்கு 25 ஆயிரம் ரூபாய் சம்பளமாக பேசப்பட்டுள்ளதால் அவருக்கு 25 லட்சத்திற்கும் அதிகமாக சம்பளம் இருக்கலாம் என தகவல் கிடைத்துள்ளது.

இந்த சம்பளத்துடன் இறுதியாக டைட்டில் பட்டம் வெல்பவர்களுக்கு 50 லட்சம் ரூபாய் ரொக்க பரிசு வழங்கப்படும் அப்படி மூவரில் யாருக்கு 50 லட்சம் ரூபாய் அதிகமாக கிடைக்கும் என்பதை இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்துவிடும். முதல் பரிசு 50 லட்சத்தை யார் தட்டி செல்வார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.