பிக்பாஸ் சீசன் 6 : தொகுத்து வழங்க கமலஹாசன் வாங்கிய மொத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

0
kamal
kamal

நடிப்பிற்கு பெயர் போன உலகநாயகன் கமலஹாசன் திரை உலகில் இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் அதில் பெரும்பாலான படங்கள் வெற்றி படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது ஏன் இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த விக்ரம் திரைப்படம் 400 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

அதனைத் தொடர்ந்து சங்கருடன் கைகோர்த்து இந்தியன் 2 திரைப்படத்தில் விறுவிறுப்பாக கமல் நடித்து வருகிறார் மறுபக்கம் கமல் அரசியல் மற்றும் சின்ன திரையில் பிக் பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார் இதனால் அவருக்கு நாலா பக்கமும் காசு மழை பெய்து வருகிறது.

இப்படி இருக்கின்ற நிலையில்  உலக நாயகன் கமலஹாசன் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்பது பற்றி தகவல் வந்துள்ளது அதன்படி கமலஹாசன் தற்பொழுது ஒரு படத்திற்கு நடிக்க குறைந்தது 70 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குவதாக சொல்லப்படுகிறது மறுபக்கம் அவர் சின்னத்திரையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை சீசன் சீசன் ஆக தொகுத்து வழங்கி வருகிறார்

அந்த வகையில் ஆறாவது சீசன் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது இந்த சீசனில் மொத்த 15 எபிசோடுகளை உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி உள்ளார் இதற்காக அவர் எவ்வளவு சம்பளம் வாங்கி உள்ளார் என்பது குறித்தும் தகவல் வெளியாகியிருக்கிறது அதன்படி பார்க்கையில் உலக நாயகன் கமலஹாசன் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சிக்காக..

சுமார் 75 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன. இந்த விஷயத்தைக் கேட்ட ரசிகர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சி தொகுத்து வழங்க நடிகர் கமலுக்கு இவ்வளவு சம்பளமாக எனக்கூறி அதிர்ச்சியில் உறைந்து இருக்கின்றனர்.