டைட்டில் வின்னர் அசிமுக்கு விலை உயர்ந்த காரை பரிசாக கொடுத்த பிக் பாஸ்.! ஆத்தாடி இத்தனை லட்சமா வாய்ப்பிளக்கும் சக போட்டியாளர்..

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது நிறைவடைந்துள்ளது. அந்த வகையில் பிக் பாஸ் டைட்டில் வின்னர் யார் என்று சமீபத்தில் தெரிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து டைட்டில் வினருக்கு விலை உயர்ந்த காரை பரிசாக கொடுத்துள்ளது பிக் பாஸ்.

தற்போது நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் youtube பிரபலம் ஜி பி முத்து, அசல் கோளாறு, அசிம், ராபர்ட் மாஸ்டர், ஏ டி கே, ஷெரின், ஜனனி, வி ஜே மகேஸ்வரி, வி ஜே கதிரவன், விஜே விக்ரமன், உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 6 ல் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து கடைசி வரை இருப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் ஆரம்பத்திலேயே வெளியேறி விட்டார் அதன் பிறகு மெட்டி ஒலி சாந்தி வெளியேற்றப்பட்டார் பின்னர் அசல் கோளாறு, மகேஸ்வரி ஆகியோர் வெளியேற்றப்பட்டனர்.

இதனை அடுத்து நிவாஷினி, ராபர்ட், மற்றும் ஜனனி, தனலட்சுமி, மணிகண்டன் ராஜேஷ், ரட்சிதா மகாலட்சுமி, உள்ளிட்டோர் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். அதன் பிறகு சிறந்த போட்டியாளராக வலம் வந்த கதிரவன் பணம் பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியேற்றினார். அவரை தொடர்ந்து அமுதவாணனும் பணத்தை எடுத்துக் கொண்டு வெளியேறினார்.

இறுதிப் போட்டியாளராக அசிம், விக்ரமன், ஷிவின் ஆகிய மூவரும் தகுதி பெற்றனர் நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில் முதல் நபராக ஷிவின் வெளியேற்றப்பட்டார். அதன் பிறகு விக்கிரமன் மற்றும் அசிம் இவர்கள் இருவரும் போட்டி போட்ட வந்தனர் இதில் அசிம் டைட்டில் வின்னர் என்று அறிவிக்கப்பட்டார்.

வெற்றி பெற்ற அசிம்க்கு பிக் பாஸ் சுசுகி இந்திய நிறுவனத்தின் BREZZA மாடலின் முதல் காரை பரிசாக கொடுத்துள்ளது இந்த காரோட விலை மட்டுமே 8 முதல் 14 லட்சம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த கார் 1462 சிசி இன்ஜின் கொள்ளளவு கொண்டுள்ளது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment