பிக்பாஸ் 6 : டைட்டில் வின்னர் அசீமுக்கு கிடைத்த மொத்த தொகை எவ்வளவு தெரியுமா.?

0
azeem
azeem

மக்களின் ஃபேவரட் நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் ஆறாவது சீசன் நேற்று நிறைவடைந்தது. இதன் தொடக்கத்தில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டு ஒவ்வொரு வார இறுதியிலும் ஒரு போட்டியாளர் வெளியேற கடைசியாக டைட்டிலை ஒரு போட்டியாளர் மட்டுமே வெல்ல முடியும்.

அந்த வகையில் இந்த பிக் பாஸ் ஆறாவது சீசனின் டைட்டிலை அசீம் வென்றார். மற்ற சீசனை காட்டிலும் இந்த சீசன் சண்டை சச்சரவு நட்பு போன்ற அனைத்தும் நிறைந்திருந்தது. மேலும் திருநங்கை போட்டியாளர் சிவின் கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சியின் இறுதிவரை பயணித்தார் என்பது இந்த சீசனில் மறக்க முடியாத ஒன்று.

ஒவ்வொரு போட்டியாளருமே தனது தனித்திறமையை வெளிப்படுத்தி சிறப்பாக விளையாடினர்.  அதிலும் குறிப்பாக அசீம் யாரிடமும் சேர்ந்து கூட்டாக விளையாடாமல் தனி ஒருவராக விளையாடி தனக்கு தோன்றியவற்றை மிக தைரியமாக பேசி போட்டியாளர்களிடையே கெட்ட பெயரை எடுத்தாலும் மக்களுக்கு..

இவர் விளையாடும் விதம் மிகவும் பிடித்து போனதால் அசீம் நாமினேட் ஆகும் ஒவ்வொரு வாரமும் மக்கள் அதிகப்படியான வாக்குகளை அவருக்கு செலுத்தி வெற்றியடைய செய்துள்ளனர். இந்த பிக் பாஸ் கடந்த சீசனின் வெற்றியாளருக்கு 50 லட்சம் பரிசுத்தொகை மற்றும் பிக் பாஸ் ட்ராபியை வழங்குவார்கள். அதுபோல இந்த சீசனின் வெற்றியாளரான அசீமுக்கும் 50 லட்சம் வழங்கப்பட்டது எனக் கூறப்பட்டது ஆனால் உண்மை அது அல்ல..

அசீம் இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்றதற்காக 34 லட்சம் தான் வாங்கியுள்ளார் எனக் கூறப்படுகிறது. ஏனென்றால் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி வாரத்தில் கதிரவன் மூன்று லட்சம் மதிப்புள்ள பண மூட்டையை பெற்று சென்றார் அவரைத் தொடர்ந்து அமுதவாணனும் 13 லட்சம் மதிப்புள்ள பெட்டியை கொண்டு சென்றதால் மீதமுள்ள 34 லட்சம் தான் அசீமிற்கு கிடைத்தது என கூறப்படுகிறது.