தான் வென்ற 50 லட்சத்தில் 25 லட்சத்தை உதவியளிக்க முடிவெடுத்துள்ள அசிம்.! அதுவும் எப்படிப்பட்டவர்களுக்கு தெரியுமா.?

ஏராளமான ரியாலிட்டி ஷோக்களை ஒளிபரப்பி தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சியாக வலம் வந்து கொண்டிருப்பது தான் விஜய் டிவி. பொதுவாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களை விட ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் நம்பர் ஒன் ரியாலிட்டி ஷோவாக ஒளிபரப்பாகி வருவதுதான் பிக்பாஸ்.

வருடம் தோறும் 100 நாட்கள் ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சி தற்போது ஆறு வருடங்களை கடந்துள்ளது. அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 6வது நிகழ்ச்சி சமீபத்தில் தான் நிறைவு பெற்றது இந்நிகழ்ச்சியில் ஏராளமான பரிச்சயமான முகங்கள் மற்றும் சில அறிமுகம் இல்லாத முகங்கள் பங்குபெற்று ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தார்.

இவ்வாறு பிக்பாஸ் சீசன் 6வது நிகழ்ச்சியில் இந்த அளவிற்கு பிரபலம் அடைவதற்கு முக்கிய காரணம் அசிம் தான். இந்நிகழ்ச்சியில் மிகவும் அவதூறாக பேசுவது சண்டையிடுவது என இருந்து வந்த அசிம்முக்கு ரெட் கார்ட் கொடுத்து பாதியிலேயே அனுப்பப்படுவார் என கூறப்பட்டது. இருந்தாலும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வந்தார்கள். மேலும் இவர் தான் இந்நிகழ்ச்சியின் டைட்டிலையும் வென்றார் இது பலருக்கும் பிடிக்கவில்லை.

இரண்டாம் இடத்தைப் பெற்ற விக்ரம் தான் இந்நிகழ்ச்சியில் வெற்றி பெற வேண்டும் எனவும் அப்படி இல்லை என்றால் சிவில் இவர்கள் இருவரில் ஒருவர் வெற்றி பெற்ற தந்தார் நன்றாக இருந்திருக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். மேலும் இந்நிகழ்ச்சியில் அசிம் வெற்றி பெற்றதால் இதற்கு மேல் பிக்பாசையே பார்க்க கூடாது என முடிவு எடுத்துள்ளதாகவும் மக்கள் கூறியது பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இப்படிப்பட்ட நிலையில் பிக்பாஸ் டைட்டிலை வென்ற அசிமுக்கு 50 லட்சம் கொடுக்கப்பட்டது எனவே அசிம் தான் வென்ற பணத்தில் பாதியை அதாவது 25 லட்சத்தை குழந்தைகளின் கல்வி செலவுக்கு வழங்குகிறாராம். ஆம், அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் வென்ற 50 லட்சத்தில் 25 லட்சத்தை கொரோனா தொற்றின் பொழுது தன்னுடைய பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்வி செலவுக்கு வழங்க உள்ளதாக வெற்றியாளர் அசிம் அறிவித்துள்ளார்.

Leave a Comment