தமிழனை பெருமைபடுத்தும் பூமி பட லிரிக் வீடியோ!! பக்கா மாஸ்.

Bhoomi_JayamRavi

jayam ravi movie:தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் ஜெயம் ரவி. இவர் நடிக்கும் திரைப்படங்கள் அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இவர் பொதுவாகவே சிறந்த கதையை தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லவர்.

தற்போது இவர் 25வது திரைப்படமான பூமி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இயக்குனர் லட்சுமண் இயக்கத்தில் உருவாகியுள்ளது இந்த பூமி திரைப்படம். இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் இமான் இசையமைத்துள்ளார். மேலும் இந்தத் திரைப்படத்தில் ஜெயம்ரவிக்கு கதாநாயகியாக நிதி அகர்வால் நடித்து உள்ளார்.

இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவி ஒரு சயின்டிஸ்ட் ஆக இருக்கிறார். இவர் விவசாயத்தை காப்பதற்காக விவசாயி ஆகவே மாறி அவர்கள் படும் கஷ்டத்தையும் துன்பத்தையும் அரசியல் கலந்து கூறியுள்ளாராம்.

ஜெயம் ரவி படம் என்றாலே ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இருப்பார்கள். அவர் தேர்ந்தெடுக்கும் கதை அந்த மாதிரி எனவே அந்த விதத்தில் பூமி என்ற படம் என தெரிந்ததும் படத்தின் எதிர்பார்ப்பு கூடியது.

பூமி படத்தின் டிரைலரை தொடர்ந்து தற்போது அந்த படத்திலிருந்து தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்ற பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலின்  லிரிக் வீடியோ இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

தனி ஒருவன் படத்தில் மிரட்டலான வில்லன் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா.? ஆனா இவர் அதுக்கு ஒத்து வர மாட்டாரே

arawind-swamy

Thanioruvan movie villan actor first choice : 2015 ஆம் ஆண்டு மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி …

Read more

பல சீன்களை படமாக எடுக்கும் இயக்குனுருடன் இணைந்த ஜெயம் ரவி.? புலம்பும் ரசிகர்கள்.

jeyam ravi

தமிழ் சினிமாவில் இளம் இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் இயக்குனர் அட்லி. இவர் சினிமா உலகிற்கு ராஜா ராணி என்ற …

Read more

தில்லாலங்கடி படத்தில் படத்தில் நடித்த நடிகர் ,நடிகைகளுக்கு ஷாக் கொடுத்த விஜய்.

vijay-tamil360newz

சினிமாவில் உள்ள ஒரு சில நடிகர்கள்  தனக்கு பிடித்தமான இயக்குனரை வைத்து தொடர்ந்து ஹிட் படங்களை கொடுப்பது வழக்கம் அப்படி …

Read more

மிரட்டல் கதையில் உருவாகும் தனிஒருவன் 2.! வில்லனாக அரவிந்த் சாமிக்கு பதில் யார் தெரியுமா?

thani oruvan 2

2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியாகிய திரைப்படம் தனி ஒருவன் இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, நயன்தாரா, …

Read more

அட நம்ம ஜெயம்ரவி இந்த திரைப்படத்தில் தான் குழந்தை நட்சத்திரமாக நடித்தாரா.! இதோ வைரலாகும் வீடியோ

jayam ravi-tamil360newz

actor jayam ravi act as a child star in this movie: தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வரும் பல பிரபலங்கள் இதற்கு முன்பு குழந்தை நட்சத்திரங்களாக சிறிய கதாபாத்திரத்திலும்  நடித்தவர்கள் தான். அப்படி இருக்கும் வகையில் முன்னணி நடிகராக வலம் வரும் ஜெயம் ரவி இதற்கு முன்பு குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்.

அனைவருக்குமே ஜெயம்ரவி முதன்முதலில் ஜெயம் என்ற திரைப்படத்தின் மூலம் தான் ஹீரோவாக அறிமுகமானார் என்று தான் தெரியும், ஆனால் ஜெயம் ரவி பிரபல தெலுங்கு திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் என்பது தான் உண்மை.

அந்த திரைப்படத்தின் காட்சியை பிரபல காமெடி நடிகர் சதீஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதுமட்டுமில்லாமல் அவரின் சிறுவயது காட்சியை பார்த்து நீங்கள் ரொம்ப அழகாக இருக்கிறீர்கள் எனவும் வருணித்துள்ளார்.

நடிகர் ஜெயம் ரவியின் அப்பா ஒரு எடிட்டர், அதனால்தான் ஜெயம் ரவிக்கு குழந்தை நட்சத்திரமாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது, பிரபல தெலுங்கு திரைப்படத்தில் ஜெயம் ரவியின் அப்பா பணியாற்றும்போது ஜெயம் ரவிக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. அதனால் ஒரு சிறிய காட்சிகளில் ஜெயம் ரவி நடித்து உள்ளார்.

இந்த நிலையில் தற்பொழுது முன்னணி நடிகராக வளர்ந்துள்ள ரவிக்கு மே ஒன்றாம் தேதி பூமி திரைப்படம் வெளியாக இருந்தது, ஆனால் தற்பொழுது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் மணிரத்னம் இயக்கிவரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஜெயம்ரவி.

https://twitter.com/actorsathish/status/1260458378553372673?s=20