திருநங்கையாக நடித்து கலக்கிய முன்னணி நடிகர்கள்! லிஸ்ட் இதோ.

0

actors who are acted as a transgender role: தமிழ் சினிமாவில் நடிகர்கள், நடிகைகள் பொதுவாக தங்களுக்கு கொடுக்கும் கதாபாத்திரங்களை அப்படியே ஏற்று நடிப்பார்கள். அதிலும் சிலர் அந்த கதாபாத்திரமாகவே மாறி விடுவார்கள் அந்த அளவிற்கு நடிப்பின் மீது மிக ஆர்வமாக உள்ளவர்கள் இருக்கிறார்கள்.

அந்த வகையில் முதலில் 2000ஆம் ஆண்டு பிரகாஷ்ராஜ் அவர்கள் அப்பு என்ற திரைப்படத்தில் திருநங்கையாக நடித்திருந்தார். அவரை தொடர்ந்து தற்போது பல நடிகர்கள் சரத்குமார், கமல்ஹாசன், விக்ரம் என இன்னும் சில நடிகர்கள் திருநங்கையாக நடித்து விருதினை பெற்றுள்ளார்கள். இதோ அந்த லிஸ்ட்.

1.நடிகர் பிரகாஷ்ராஜ் அப்பு என்ற திரைப்படத்தில் திருநங்கை வில்லனாக நடித்துள்ளார். இவரே தமிழில் முதன்முதலில் திருநங்கை வேடம் அணிந்து நடித்த நடிகர் ஆவார்.

2.நடிகர் சரத்குமார் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர். இவர் காஞ்சனா திரை படத்தில் திருநங்கை கதாபாத்திரத்தில் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இத்திரைப்படத்துக்காக இவர் சிறந்த துணை நடிகருக்கான விருதை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

3.நடிகர் ஜெயம்ரவி ஆதிபகவான் திரைப்படத்தில் இரண்டு கெட்டப்பில் நடித்திருந்தார். அதில் ஒரு கெட்டபாக திருநங்கை தோற்றத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பை பல திரையுலக பிரபலங்கள் பாராட்டி இருந்தனர்.

4. நடிகர் விஜய் சேதுபதி வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக உள்ளார். இவர் 2011 ஆம் ஆண்டு சூப்பர் டீலக்ஸ் என்ற திரைப்படத்தில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்தத் திரைப்படத்திற்காக இவர் சர்வதேச விருதுகளைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

5.நடிகர் விக்ரம் இருமுகன் திரைப்படத்தில் திருநங்கையாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களைத் தொடர்ந்து. 6. ராகவா லாரன்ஸ் காஞ்சனா திரைப்படத்தில் முதல் பாகத்தில் திருநங்கையாக நடித்திருந்தார். மேலும் 7. காமெடி நடிகரான விவேக் நங்கை கதாபாத்திரத்தை ஏற்று சிறப்பாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.