இயக்குனராக அவதாரமெடுக்கும் ஜெயம் ரவி!! இந்த நடிகர் தான் ஹீரோ!! வைரலாகும் புகைப்படம்.

jayamravi
jayamravi

jayam ravi going to direct a movie with this actor photo: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர்களில் ஜெயம் ரவியும் ஒருவர். பொதுவாகவே இவர் நடிக்கும் திரைப்படங்கள் அனைத்தும் மிகப் பெரிய வெற்றியைப் பெறும் அதற்குக் காரணம் இவர் தேர்ந்தெடுக்கும் கதையே.

அதாவது சமூகத்திற்கு எந்த விஷயங்களை கூற நினைக்கிறாரோ அந்த கதையை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். கருத்துள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருவதால் படமும் மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்து விடுகிறது.

இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்து வெற்றி பெற்ற திரைப்படம் கோமாளி. மேலும் தற்போது அவர் நடித்துக்கொண்டிருக்கும் திரைப்படம் பூமி. ஜெயம் ரவி தற்போது  படங்களில் ஹீரோவாக நடித்துக்கொண்டிருக்கிறார் அதை தொடர்ந்து இவர் இயக்குனராக அவதாரம் எடுக்கப் போவதாக செய்தி வெளியாகி உள்ளது.

ஜெயம் ரவி தன்னுடன் கோமாளி திரைப்படத்தில் நடித்த காமெடி நடிகரான யோகி பாபுவை ஹீரோவாக வைத்து திரைப்படம் இயக்க உள்ளதாக பேசப்படுகிறது. இவர் பிஸியாக படத்தில் நடித்துக் கொண்டிருப்பதால் படத்தை இயக்குவதில் தாமதமாகி உள்ளதாகவும் படப்பிடிப்பு முடிந்தவுடன் இந்த படத்தை இயக்க உள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

அதோடு மட்டுமல்லாமல் ஜெயம் ரவி ஏற்கனவே ஆளவந்தான் திரைப்படத்தில் சுரேஷ்கிருஷ்ணாவிடம் உதவியாளராக பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவரது ரசிகர்கள் ஜெயம் ரவி ஹீரோவாக பார்த்து விட்டோம் இயக்குனராக பார்க்க ஆர்வமாக உள்ளோம் எனவும் கூறுகின்றனர்.

jayamravi
jayamravi