தமிழனை பெருமைபடுத்தும் பூமி பட லிரிக் வீடியோ!! பக்கா மாஸ்.

0

jayam ravi movie:தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் ஜெயம் ரவி. இவர் நடிக்கும் திரைப்படங்கள் அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இவர் பொதுவாகவே சிறந்த கதையை தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லவர்.

தற்போது இவர் 25வது திரைப்படமான பூமி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இயக்குனர் லட்சுமண் இயக்கத்தில் உருவாகியுள்ளது இந்த பூமி திரைப்படம். இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் இமான் இசையமைத்துள்ளார். மேலும் இந்தத் திரைப்படத்தில் ஜெயம்ரவிக்கு கதாநாயகியாக நிதி அகர்வால் நடித்து உள்ளார்.

இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவி ஒரு சயின்டிஸ்ட் ஆக இருக்கிறார். இவர் விவசாயத்தை காப்பதற்காக விவசாயி ஆகவே மாறி அவர்கள் படும் கஷ்டத்தையும் துன்பத்தையும் அரசியல் கலந்து கூறியுள்ளாராம்.

ஜெயம் ரவி படம் என்றாலே ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இருப்பார்கள். அவர் தேர்ந்தெடுக்கும் கதை அந்த மாதிரி எனவே அந்த விதத்தில் பூமி என்ற படம் என தெரிந்ததும் படத்தின் எதிர்பார்ப்பு கூடியது.

பூமி படத்தின் டிரைலரை தொடர்ந்து தற்போது அந்த படத்திலிருந்து தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்ற பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலின்  லிரிக் வீடியோ இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.