3வது ப்ரமோ இதோ!! பாலாஜி முருகதாஸின் கதையை கேட்டு அவரை கட்டிப்பிடித்து கதறி அழும் ஹவுஸ் மெட்கள்!! இதோ வீடியோ.

balaji

3rd promo video balaji murugadass speaks about his parents:பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாள் மட்டுமே மிக கலகலப்பாக போட்டியாளர்கள் டிக் டிக் யாரது என்ற கேமை விளையாடி சந்தோஷமாக இருந்தனர் அதுமட்டுமல்லாமல் அறந்தாங்கி நிஷாவின் காமெடி என கலகலப்பாக இருந்தனர்.

அதனைத் தொடர்ந்து வரும் நாட்களில் சண்டை, சோகம் என மாறி மாறி இருந்தது. தங்களின் வாழ்நாளில் கடந்து வந்த கஷ்டங்களை சொல்லி வரும் நேரத்தில் இன்றைய  மூன்றாவது புறம் ோவில் பாலாஜி முருகதாஸ் அவர்கள் தன் வாழ்வில் தான் கடந்து வந்த சோக கதையை கூறுகிறார்.

அவர் கூறியதாவது எனது தாய் மற்றும் தந்தை இருவரும் என்னை பெற்றதோடு சரி அதன்பின் என்னைப் பள்ளியில் சேர்த்துவிட்டு என்னை சரியாக கவனிக்கவில்லை. அவர் பேசியது குழந்தைகளை பெற்று சரியாக வளர்க்க முடியவில்லை என்றால் ஏன் குழந்தையை பெற்று கொள்கிறீர்கள் என தவறான பெற்றோர்களுக்கு செருப்படி கொடுப்பதுபோல பேசியிருந்தார்.

அவர் பேசியதைக் கேட்ட சக போட்டியாளர்கள் அவருக்கு ஆறுதல் கூறியதோடு மட்டுமல்லாமல் அவரை கட்டிப்பிடித்து அழுதனர் அத்துடன் இந்த ப்ரமோ முடிவடைந்தது.

வெளிவந்த இன்றைய 2வது ப்ரமோ!! பரபரப்புக்கு பஞ்சமே இல்லாமல் போகும் பிக் பாஸ் 4!! இதோ அந்த வீடியோ.

biggboss-4-tamil

பிக் பாஸ் நிகழ்ச்சி ஏற்கனவே முதல் கட்ட ப்ரமோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத் அவர்கள் தனக்கென ஒரு அட்ரஸ் கூட இல்லை எனவும், என் குடும்பத்திற்க்கு நான் அப்பா அம்மாவாக இருந்து என் தம்பி அம்மா அப்பாவை பார்த்து உள்ளேன் எனவும் நான் இந்த இடத்திற்கு வருவதற்கு எவ்வளவோ கஷ்டப்பட்டு இருக்கேன் எனவும் கூறினார்.

அதோடு மட்டுமல்லாமல் நான் ஒரு செய்தி வாசிப்பாளராக பிரபலமாவதற்கு நிறைய கஷ்டங்களை தாண்டி வந்துள்ளேன். தற்ப்போது நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி தன்னை டிரகர் செய்து எனது பெயரை கெடுக்க பார்க்கிறார் எனவும் கூறினார்.

அதனைத் தொடர்ந்து தற்போது வெளிவந்த ப்ரமோவில் சுரேஷ் சக்ரவர்த்தி அவர்கள் தன்னைப் பற்றிக் கூறிவிட்டு பின்பு அனிதா சம்பத்தை கலாய்ப்பது போன்று பேசுகிறார்.  லவ் யூ ஆல் என சொல்லி யாரையாவது மனம் புண்படும்படி பேசி இருந்தால் மன்னித்து விடுங்கள் எனவும் கூறுகிறார்.

அதோடு நான் ஹுர்ட் கம்மியாத்தான் பண்ணி இருப்பேன் அதிகமாக  பண்னுணா தாங்க மாட்டீங்க என அவர் பேசுவது ப்ரமோவில் வெளிவந்துள்ளது.

அதோடு மட்டுமல்லாமல் இந்த போட்டியில் நான் கடைசிவரை நின்று கடும் போட்டியாளராக அனைவரிடமும் போட்டி போடுவேன். மேலும் இந்த ஷோவில் யார் வெற்றி பெற்றாலும் அது நான் பெற்ற வெற்றியாகவே எடுத்துக் கொள்வேன் எனவும் கூறுகிறார்.

 

வெளிவந்த இரண்டாவது ப்ரமோ!! அனிதா சம்பத்துக்கு என்னதான் ஆச்சு. !! ப்ரமோல வந்தே ஆகணும்னு முடிவு பண்ணிட்டாங்களா.

biggboss

today biggboss 4 2 promo video:பிக்பாஸ் நிகழ்ச்சி பொறுத்தவரை ஹைலைட்டாக பேசப்பட வேண்டும் என்றால் யாருடனாவது மிகப்பெரிய அளவில் சண்டையிடனும் அப்பதான் அவங்க ஃபேமஸ் ஆவாங்க. ப்ரமோவிலும் வர முடியும் இதை தெரிந்துகொண்டே முதல்நாளே சண்டையிட ஆரம்பித்தார் அனிதா சம்பத்.

விளையாட்டாக நியூஸ் ரீடரை கிண்டல் செய்த சுரேஷ் சக்கரவர்த்தி அவரை விடாமல் வம்புக்கு இழுக்கும் அனிதா சம்பத். இன்று மீண்டும் அவருடன் வம்புக்கு இழுக்கிறார். நல்ல மாட்டுக்கு ஒரு சூடு எனக்கூறி இனிமேல் என்னிடம் பேசாதே சண்டையிடாதே என கூறியும் விடாமல் வம்பு இழுக்கும் அனிதா சம்பத்.

அதற்காக ரேகா அவர்கள் சுரேஷ் இடம் போன போது போங்க சின்ன பொண்ணுதான் என சமாதானப்படுத்தினார். இன்றைய இரண்டாவது ப்ரமோவின் ஹைலைட்டே சுரேஷ் சக்கரவர்த்தியும் அனிதா சம்பத்தும் சண்டை போட்டுக் கொள்வதுதான்.

இதனைப் பார்த்த ரசிகர்கள் இது என்ன தீராத சண்டையாக இருக்கும் போல கமல்லை வர சொல்லி  சீக்கிரம் குறும்படம் போட்டு காமியுங்கள் அனிதா சம்பத்க்கு என கூறுகின்றனர்.

இதோ அந்தப் ப்ரமோ வீடியோ.

குறும்படம் போட சொல்லி கேட்கும் அனிதா சம்பத் !! வைரலாகும் வீடியோ.

biggboss-4-anitha1

anitha sampath: இன்று வெளியான முதல் ப்ரமோவில்  ஷிவாணியை கார்னர் செய்யும் ஹவுஸ் மெட்கள். ஷிவானியுடன் ஆறுதலாக பேசும் ஆரி, ஜித்தன் ரமேஷ் மற்றும் சம்யுக்தா. மேலும் அதனைத் தொடர்ந்து இரண்டாவது ப்ரமோ வெளியானது அதில் அனிதா சம்பத் அறந்தாங்கி நிஷாவிடம் அழுது கொண்டு பேசுகிறார்.

அதாவது அவருக்கு நிஷாவை ரொம்ப பிடிக்குமாம் காரணம் அவர் அம்மாவும் நிஷாவை போல கருப்பாகத்தான் இருப்பாராம். அதோடு மட்டுமல்லாமல் அவர் நகை கூட போடமாட்டாராம்.

அதுமட்டுமல்லாமல் தான் கருப்பாக இருக்கிறோம் என்று மிகவும் தாழ்வு மனப்பான்மை யோடும் இருப்பாராம். நீங்கள் மிகவும் தைரியமாக இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மற்றவர்களையும் ரசிக்க வைக்கிறீர்கள். என் அம்மாவும் உங்களிடமிருந்து இதை கற்றுக்கொள்ள வேண்டும் என அவர் கூறுகிறார்.

இதனை தொடர்ந்து தற்போது வெளிவந்த அடுத்த ப்ரமோவில் அனிதா சம்பத் சுரேஷிடம் சண்டை போடுவது போன்ற காட்சி வெளியானது. அதாவது சண்டைக்கான காரணம் என்னவென்றால் சுரேஷ் சக்ரவர்த்தி அனிதா சம்பத்திடம் பேசும்போது பொதுவாகவே நான் செய்திவாசிப்பாளர்களிடம் பேசுவது இல்லை அவர்கள் பேசும் போது எச்சில் தெறிக்கும் என சொன்னதாக அனிதா சம்பத் அவர் மீது குற்றம் சாட்டுகிறார்.

ஆனால் அதற்கு சுரேஷ் சக்ரவர்த்தி நான் அப்படி கூறவே இல்லை என கூறுகிறார். அதற்காக அனிதா சம்பத் குறும்படம் போட்டுப் பார்ப்போம் என சொல்கிறார். அதைக் கேட்ட சுரேஷ் குறும்படம் என்ன பெரும் படம் கூட போட்டு பாருங்கள் என கூறுகிறார். இதோ அந்த வீடியோ.

வெளிவந்த 3வது ப்ரோமோ!! வந்தவுடனே சண்டையை ஆரம்பித்த அனிதா சம்பத்!! இரண்டாய் போன வீடு.!! வைரலாகும் வீடியோ.

biggboss-4-anitha

2day 3rd promo anitha sampath fight with suresh chakravarthy video:பிக் பாஸ் சீசன் 4 வெற்றிகரமாக தொடங்கி நன்றாக போய்க் கொண்டிருந்தபோது நேற்று பிக்பாஸ்டாஸ்க் ஒன்றை வைத்தார். அதன் மூலம் ரம்யா பாண்டியன் இந்த வார தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அதனைத் தொடர்ந்து தங்களுக்கு பிடித்த போட்டியாளர்கள் பிடிக்காத போட்டியாளர்கள் என இருவருக்கும் ஹார்ட் சிம்பிள் மற்றும் ஹார்ட் பிரேக் சிம்பிள் கொடுத்து 2 பெயருக்கு போட சொன்னார்கள்.

அதில் அதிகப்படியான ஹார்ட் பிரேக் வாங்கியவர் சிவானி. இதனால் அவர் சோகத்தில் ஆழ்ந்து இருந்தார் வெளிவந்த முதல் ப்ரமோவில் ஆரி ஷிவானி நாராயணனனுக்கு ஆறுதல் சொல்வது போல தெரிந்தது.

அதனைதொடர்ந்து அடுத்ததாக வெளியே வந்த ப்ரமோவில் செய்திவாசிப்பாளர் அனிதா சம்பத் அறந்தாங்கி நிஷாவிடம் உங்களைப் பார்த்தா எனது அம்மா போல உள்ளது எனக்கூறி அழுகிறார். மேலும் என் அம்மாவும் கருப்பாக தான் இருப்பாங்க அதனால தான் ஒரு நகை கூட போட்டுக்க மாட்டாங்க. ரொம்ப இன்பிரியரா இருப்பாங்க என சொல்லி அழுகிறார்.

அதை தொடர்ந்து தற்போது வெளிவந்த மூன்றாவது ப்ரமோவில் அனிதா சம்பத் சுரேஷ் சக்கரவர்த்தியிடம் சண்டையிடுவது போன்று வீடியோ வெளியானது. அதுமட்டுமல்லாமல் அனிதா சம்பத் குறும்படம் போட சொல்லி பிக்பாஸிடம் கேட்கிறார்.

இதோ அந்த ப்ரமோ.

3வது ப்ரமோ வெளியானது!! அறந்தாங்கி நிஷாவுக்கு என்ன ஆயிற்று!! வைரலாகும் வீடியோ.

nisha

3rd promo video: இன்று பிக் பாஸ் சீசன் 4 முதல் நாள் வெற்றிகரமாக 14 நாட்கள் ஹோட்டல் அறையில் தனித்து வைக்கப்பட்டு கொரோனா தொற்று ரிசல்ட் எடுக்கப்பட்டு பிறகு 14 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.

காலையிலேயே முதல் ப்ரமோ வெளியாகி ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை தூண்டியது. முதல் பிரமோவில் மாஸ்டர் திரைப்படத்தின் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடிகர்-நடிகைகள் அனைவரும் மிகவும் சந்தோஷமாக டான்ஸ் ஆடி இருந்தனர். அதுமட்டுமல்லாமல் ரியோ மற்றும் அறந்தாங்கி நிஷா இருவரும் பாத்ரூமில் ஜாலியாக டான்ஸ் ஆடினார்கள்.

மேலும் இவர்கள் இருவரும் தான் இந்த வருடத்தில் மக்களை என்டர்டைன்மென்ட் செய்வார்கள் என ரசிகர்கள் கூறுகின்றனர். அதோடு ரம்யா பாண்டியன் டான்ஸ் ஆடும்போது பிளையிங் கிஸ் கொடுத்தார். எனவே அதற்காக ரசிகர்கள் இவருக்கு சீக்கிரமாக ஆர்மி ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என கூறுகின்றனர்.

அதனைத் தொடர்ந்து இரண்டாவது பிரோம் ஒன்று வெளியானது. இந்தப் ப்ரமோவில் சிவானி நாராயணனை வீட்டிலுள்ளவர்கள் டார்கெட் செய்வது போன்று காண்பிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் சனம் ஷெட்டி, சிவானி நாராயணனை பார்த்து உங்களுக்கு இங்க இருக்க எந்த தகுதியும் இல்லை என கூறுவது போன்ற வீடியோ ஒன்று வெளியானது.

அதனை தொடர்ந்து தற்போது மூன்றாவது புரோமோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில் பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதில் அறந்தாங்கி நிஷா ஓடிக் கொண்டிருக்கும் போது கீழே தடுக்கி விழுவது போன்ற வீடியோ வெளியாகி உள்ளது. அவரைப் பார்த்து ரியோ சிரிப்பது போல இருக்கிறது. தற்போது அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

பிக் பாஸ் சீசன் 4 இரண்டாவது ப்ரமோ வெளியானது.!! ஷிவானியை டார்கெட் செய்யும் ஹவுஸ் மெட்டுகள் வைரலாகும் வீடியோ.

bigboss 2 promo

shivani narayanan targeted by housemates and especially shanamsheddy 2nd promo video viral: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 4  நிகழ்ச்சி 14 நட்சத்திரங்கள் நேற்று அறிமுகப்படுத்தப்பட்ட தொடங்கப்பட்டது. இன்று முதலாவது நாள் முதல் எபிசோட் மிகப்பிரம்மாண்டமாக காலையிலேயே மாஸ்டர் திரைப்படத்திலிருந்து வாத்தி கம்மிங் பாடலோடு குத்தாட்டம் ஆக தொடங்கியது.

இந்நிலையில் முதல் நாளான இன்று தற்போது பிக் பாஸின் இரண்டாவது புரோமோ வெளியானது. இந்த ப்ரமோவில் சீரியல் நடிகை ஷிவானியை மற்ற ஹவுஸ் மெட்டுக்கள் டார்கெட் செய்வது போன்று காட்சி ஒன்று வெளியாகியுள்ளது. அதிலும் குறிப்பாக சனம் ஷெட்டி மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி மிகவும் கடுமையாக பழகுவது போன்ற ப்ரமோ வெளியாகியுள்ளது.

சீரியல் நடிகை ஷிவானி நாராயணனுக்கு சனம் ஷெட்டியை விடவே ஃபேன் பாலோவிங் அதிகம் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான 3 சீரியல்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.

அதோடு மட்டுமல்லாமல் தினமும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்திருந்தார் .இதன் மூலம் இவருக்கு வெள்ளித்திரை நடிகைகளை விட அதிக ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ப்ரமோவை தொடர்ந்து இன்றைய எபிசோடில் ஷிவானிக்கு என்னதான் நடக்கும் என பார்ப்போம். தற்போது இந்த இரண்டாவது புரோமோ வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.