பிக் பாஸ் சீசன் 4 இரண்டாவது ப்ரமோ வெளியானது.!! ஷிவானியை டார்கெட் செய்யும் ஹவுஸ் மெட்டுகள் வைரலாகும் வீடியோ.

0

shivani narayanan targeted by housemates and especially shanamsheddy 2nd promo video viral: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 4  நிகழ்ச்சி 14 நட்சத்திரங்கள் நேற்று அறிமுகப்படுத்தப்பட்ட தொடங்கப்பட்டது. இன்று முதலாவது நாள் முதல் எபிசோட் மிகப்பிரம்மாண்டமாக காலையிலேயே மாஸ்டர் திரைப்படத்திலிருந்து வாத்தி கம்மிங் பாடலோடு குத்தாட்டம் ஆக தொடங்கியது.

இந்நிலையில் முதல் நாளான இன்று தற்போது பிக் பாஸின் இரண்டாவது புரோமோ வெளியானது. இந்த ப்ரமோவில் சீரியல் நடிகை ஷிவானியை மற்ற ஹவுஸ் மெட்டுக்கள் டார்கெட் செய்வது போன்று காட்சி ஒன்று வெளியாகியுள்ளது. அதிலும் குறிப்பாக சனம் ஷெட்டி மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி மிகவும் கடுமையாக பழகுவது போன்ற ப்ரமோ வெளியாகியுள்ளது.

சீரியல் நடிகை ஷிவானி நாராயணனுக்கு சனம் ஷெட்டியை விடவே ஃபேன் பாலோவிங் அதிகம் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான 3 சீரியல்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.

அதோடு மட்டுமல்லாமல் தினமும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்திருந்தார் .இதன் மூலம் இவருக்கு வெள்ளித்திரை நடிகைகளை விட அதிக ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ப்ரமோவை தொடர்ந்து இன்றைய எபிசோடில் ஷிவானிக்கு என்னதான் நடக்கும் என பார்ப்போம். தற்போது இந்த இரண்டாவது புரோமோ வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.