வெளிவந்த இன்றைய 2வது ப்ரமோ!! பரபரப்புக்கு பஞ்சமே இல்லாமல் போகும் பிக் பாஸ் 4!! இதோ அந்த வீடியோ.

0

பிக் பாஸ் நிகழ்ச்சி ஏற்கனவே முதல் கட்ட ப்ரமோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத் அவர்கள் தனக்கென ஒரு அட்ரஸ் கூட இல்லை எனவும், என் குடும்பத்திற்க்கு நான் அப்பா அம்மாவாக இருந்து என் தம்பி அம்மா அப்பாவை பார்த்து உள்ளேன் எனவும் நான் இந்த இடத்திற்கு வருவதற்கு எவ்வளவோ கஷ்டப்பட்டு இருக்கேன் எனவும் கூறினார்.

அதோடு மட்டுமல்லாமல் நான் ஒரு செய்தி வாசிப்பாளராக பிரபலமாவதற்கு நிறைய கஷ்டங்களை தாண்டி வந்துள்ளேன். தற்ப்போது நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி தன்னை டிரகர் செய்து எனது பெயரை கெடுக்க பார்க்கிறார் எனவும் கூறினார்.

அதனைத் தொடர்ந்து தற்போது வெளிவந்த ப்ரமோவில் சுரேஷ் சக்ரவர்த்தி அவர்கள் தன்னைப் பற்றிக் கூறிவிட்டு பின்பு அனிதா சம்பத்தை கலாய்ப்பது போன்று பேசுகிறார்.  லவ் யூ ஆல் என சொல்லி யாரையாவது மனம் புண்படும்படி பேசி இருந்தால் மன்னித்து விடுங்கள் எனவும் கூறுகிறார்.

அதோடு நான் ஹுர்ட் கம்மியாத்தான் பண்ணி இருப்பேன் அதிகமாக  பண்னுணா தாங்க மாட்டீங்க என அவர் பேசுவது ப்ரமோவில் வெளிவந்துள்ளது.

அதோடு மட்டுமல்லாமல் இந்த போட்டியில் நான் கடைசிவரை நின்று கடும் போட்டியாளராக அனைவரிடமும் போட்டி போடுவேன். மேலும் இந்த ஷோவில் யார் வெற்றி பெற்றாலும் அது நான் பெற்ற வெற்றியாகவே எடுத்துக் கொள்வேன் எனவும் கூறுகிறார்.