sembaruthi

கண்ணீருடன் செம்பருத்தி சீரியல் நடிகை.! வருத்தத்தில் ரசிகர்கள்

sembaruhti serial actress jannani ashokkumar cried video viral: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் மிக முக்கியமான சீரியல் செம்பருத்தி இந்த சீரியலில் அகிலாண்டேஸ்வரியின் இரண்டாவது மருமகளாக நடித்து வருபவர் சீரியல் நடிகை ஜனனி அசோக் குமார்.

இந்த சீரியலில் இவரின் கதாபாத்திரம் ஆரம்பத்தில் வில்லி போன்று நடித்து பின்பு நல்ல மருமகளாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இவர் யூடியூப் சேனல் ஒன்றை இயக்கி வருகிறார். அதில் அழகு குறிப்புகளை அவ்வப்போது பதிவிட்டு வருவார்.

இப்படி இருக்கும் நிலையில் இவர் யூடியூபில் சேனலில் லைவ்வில் வந்து அழுது கொண்டே இனி செம்பருத்தி சீரியலில் நடிக்க போவதில்லை என்றும் மேலும் தன்னை சீரியலில் இருந்து தூக்கி விட்டதாகவும் அவருக்கு பதிலாக வேறொருவர் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடிக்கப் போவதாகவும் கூறி மிகவும் வருத்தப்பட்ட நிலையில்  அழுது கொண்டே பேசியுள்ளார்.

மேலும் இவர் ஏன் திடீரென இந்த சீரியலில் இருந்து விலக்கப்பட்டார் என்ற காரணம் கூட தெரியவில்லை என்றும் நீக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் வருந்தியுள்ளார்.

மேலும் இந்த சீரியலில் இவரின் நடிப்பிற்கு ரசிகர்கள் கொடுத்த ஆதரவிற்கு அவர்களுக்கு நன்றியும் தெரிவித்திருந்தார். இதோ அந்த வீடியோ.