siva

சிவா நடித்துள்ள ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரன்’ பட டிரைலர் இதோ.!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி தற்பொழுது காமெடி கலாட்டா நிறைந்த திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்து கலக்கி வருபவர் தான் சிவா. இவருடைய காமெடி திறமையினால் தற்பொழுது அகில உலக சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இவருடைய நடிப்பில் ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரன்’ என்ற படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் சமீப காலங்களாக மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் வரும் 24ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இந்த படத்தின் டிரைலர் சற்று முன்பு வெளியாகிய இணையதளத்தில் வைரலாகி வருகிறது. முழுக்க முழுக்க காமெடி கலாட்டா நிறைந்த படமாக இந்த படம் உருவாகி இருப்பது ட்ரெய்லரின் மூலம் தெரிய வருகிறது.

மேலும் இரண்டு நிமிடங்களுக்கு மேல் ஓடும் டிரைலரில் உள்ள காட்சிகள் ரசிகர்கள் மனதை பெரிதளவில் கவர்ந்துள்ளது. சமீப காலங்களாக உலகம் ஸ்மார்ட் போனால் முழுகியுள்ளது மேலும் இந்த ஸ்மார்ட் போனால் பல பிரச்சனைகளும் வரும் நிலையில் அதனை காமெடியாக இயக்குனர் மக்களுக்கு எடுத்துரைத்துள்ளார். அந்த வகையில் சிவாவுக்கு மிகவும் வித்தியாசமான ஸ்மார்ட் போன் கிடைக்க இதன் மூலம் அவர் என்னென்ன செய்கிறார் என்பதே இந்த படத்தின் கதை.

இந்தப் படத்தில் சிவா, அஞ்சுகுரியன், மேவு ஆகாஷ், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்துள்ள நிலையில் விக்னேஷ் ஷா இயக்கியுள்ளார். இதனை அடுத்து லியோன் ஜேம்ஸ் இசையில் ஆர்தர் வில்சன் ஒலிப்பதிவில், பூபதி செல்வராஜ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை லார்ஜ் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

siva

வித்தியாசமான ஸ்மார்ட் போனிடம் மாட்டிக்கொண்ட சிவா.! காமெடி கலாட்டா நிறைந்த ‘சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும்’ பட டீசர் இதோ..

தமிழ் சினிமாவிற்கு காமெடி நடிகராக அறிமுகமான ஏராளமான பிரபலங்கள் தற்பொழுது ஹீரோவாகவும் நடித்து கலக்கி வருகின்றனர் இவர்களுடைய நடிப்பில் வெளிவரும் அனைத்து படங்களும் காமெடி கலாட்டா நிறைந்த படமாக இருந்து வருவதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தன்னுடைய காமெடியின் மூலம் தமிழ் திரைவுலகில் அகில உலக சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுபவர் தான் நடிகர் சிவா.

இவர் நடிப்பில் சிங்கில் சங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும் என்ற திரைப்படம் வெளியாக இருக்கிறது இப்படிப்பட்ட நிலை இந்த படத்தின் டீசர் சற்று முன் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த டீசரை பார்க்கும் பொழுது இவருக்கு வித்தியாசமான ஸ்மார்ட் போன் ஒன்று கிடைத்துள்ளது. இதனால் அந்த ஸ்மார்ட் போனால் அவருக்கு ஏற்படுத்தும் பிரச்சனைகளை மிகவும் காமெடியாக சொல்லும் படமாக தான் சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனம்  என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் மாகாபா ஆனந்த், பாலா, மேகா ஆகாஷ், மொட்டை ராஜேந்திரன், அஞ்சுகுரியன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களிடத்தில் விக்னேஷ் சிவா இயக்க லியோ ஜேம்ஸ் இசையில் ஆர்தர் வில்சன் ஒலிப்பதிவில் பூபதி செல்வராஜ் படத்தொகுப்பில் உருவாகியுள்ளது.

இதனை அடுத்து லார் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இவ்வாறு முழுக்க முழுக்க காமெடி கலாட்டாவாக உருவாகி உள்ள இந்த திரைப்படத்தினை பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் காத்து வருகின்றனர்.