“அண்ணாத்த” படத்தின் முதல்நாள் வசூல் வேட்டையை கண்டு மிரண்ட தமிழ் சினிமா .? வெளியான ரிப்போர்ட்.

டாப் நடிகர்களின் படங்கள் எப்போதுமே மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான் அந்த வகையில் தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினி கோடானகோடி ரசிகர்களை தன் வசப்படுத்தி உள்ளார்.

அந்த காரணத்தினால் இவரது படைப்புகள் எப்போதும் நல்ல வரவேற்பு கிடைப்பதோடு மட்டுமல்லாமல் வசூல் வேட்டை பெரிய அளவில் நடத்தும் அந்த வகையில் சிறுத்தை சிவாவுடன் முதல் முறையாக கைகோர்த்து ரஜினி அண்ணாத்த என்ற கிராமத்து படத்தில் நடித்து முடித்திருந்தார் இந்த திரைப்படம் நேற்று தீபாவளியை முன்னிட்டு கோலாகலமாக வெளியாகியது.

படம் வெளியாவதற்கு முன்பாக டிரைலர் மற்றும் பாடல்கள் ஆகியவை கவர்ந்ததால் மக்கள் கூட்டம் திரையரங்கில் கூட்டம் அலைமோதியது தமிழ்நாட்டில் பெரும்பாலான திரையரங்குகளை எப்படி கைபற்றியதோ அதுபோல வெளிநாட்டிலும் 1200க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் அண்ணாத்த திரைப்படம் வெளியாகி புதிய சாதனை படைத்தது.

இந்த திரைப் படத்தில் ரஜினியுடன் கைகோர்த்து மீனா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, நயன்தாரா, சூரி, பிரகாஷ்ராஜ், ஜெகபதிபாபு, அபிமன்யு சிங் போன்ற பலர் நடித்திருந்தனர். அண்ணாத்த படம் அண்ணன் தங்கை செண்டிமெண்ட் படம் என்பதால் குடும்பத்தினரையும் தற்போது வெகுவாக கவர்ந்துள்ளது.

இப்படி இருக்கின்ற நிலையில் முதல் நாள் வசூல் மட்டும் அண்ணாத்த படம் அமோக வசூலை அள்ளி உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன தமிழ்நாட்டில் மட்டும் முதல் நாள் வசூல் 25 கோடிக்கு மேல் என தெரியவந்துள்ளது. இச்செய்தி தற்போது சமூக வலைதளப் பக்கத்தில் பகிரப்பட்டு காட்டுத் தீ போல பரவி வருகிறது மேலும் ரசிகர்களும் இதைக் கொண்டாடி வருகின்றனர்.

Leave a Comment