தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. ஆரம்பத்தில் இருந்து இப்போது வரையிலும் வித்தியாசமான படங்களை கொடுத்து மக்கள் மற்றும் ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வருகிறார் இவர் கடைசியாக சுல்தான் படத்தில் நடித்தார் அதனை தொடர்ந்து இவர் பல்வேறு படங்களில் ஒப்பந்தமாகி நடித்து இருந்தாலும்..
எந்த ஒரு திரைப்படமும் இதுவரை வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது இவரது கையில் சர்தார், பொன்னியின் செல்வன், விருமன் ஆகிய படங்கள் இருக்கின்றன அனைத்து திரைப்படங்களும் அடுத்தடுத்து வெளியாக இருப்பதால் செம சந்தோஷத்தில் இருக்கிறார் நடிகர் கார்த்தி.
இந்த நிலையில் கார்த்தி நடிப்பில் 2011 ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் சிறுத்தை. இந்த படத்தை தனக்கே உரிய பாணியில் சிவா இயக்கினார். இத்திரைப்படம் கார்த்தி கேரியரில் மிகப்பெரிய ஒரு திருப்புமுனை படம் இந்த படம் முழுக்க முழுக்க ஆக்சன், காமெடி கலந்த படமாக இருந்ததால் அப்போது வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்தது.
இந்த படத்தில் கார்த்தியுடன் கைகோர்த்து சந்தானம், தமன்னா, மனோபாலா மற்றும் பல டாப் நடிகர், நடிகைகள் நடித்து அசத்தி இருந்தனர். இந்த திரைப்படம் வெளிவந்து விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. 2011ல் இந்த திரைப்படம் வெளிவந்து 48 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
சிறுத்தை திரைப்படத்திற்கு பிறகு நடிகர் கார்த்தியின் சினிமா பயணமும் அதிகரித்து என்பது குறிபிடத்தக்கது இவரைப்போலவே இயக்குனர் சிவாவும் அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைத்தது அதை சரியாக பயன்படுத்தி இருவரும் ஓடி தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பிரபலங்கள் ஆக மாறி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.