itiyat

பேயையே அறவிடும் சிவா.! வைரலாகும் இடியட் பட டிரைலர்.!

பொதுவாக சினிமாவில் சில நடிகைகளால் தொடர்ந்து  முன்னணி நடிகைகளாக நிலைத்து நிற்க முடியாது. ஒரு சில பேர் எளிதில் பிரபலமடைந்த பிறகு மார்க்கெட் குறைந்ததும் சினிமாவில் சரியான கதை அமையாமல் திரைப்படங்களில் நடிக்காமல் தள்ளாடி வருவார்கள்.

அந்தவகையில் ஒருவர் தான் நிக்கிகல்ராணி. இவர் பிரபுதேவா உட்பட இன்னும் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் சொல்லும் அளவிற்கு பிரபலம் அடையவில்லை. இடையில் சில காலங்கள் இவர் சினிமாவில் இருக்கிறாரா இல்லையா என்பதே தெரியாத அளவிற்கு இருந்து வந்தது.

இந்நிலையில் தற்பொழுது தான் இவர் நடிப்பில் சில படங்கள் வெளிவர உள்ளது. இது ஒருபுறமிருக்க தற்பொழுது காமெடி நடிகர்களாக அறிமுகமான பலர் சில படங்களில் ஹீரோவாக நடித்து கலக்கி வருகிறார்கள். பொதுவாகவே காமெடி நடிகர்கள் ஹீரோவாக அறிமுகமானால் அவர்களின் படங்களில் காமெடிக்கு பஞ்சம் இல்லாமல் மிகவும் சுவாரசியமானா ஒன்றாக அமையும்.

அந்த வகையில் தனது எதார்த்த காமெடியினால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் நடிகர் சிவா. இவர் தமிழ் படம் 2 என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக தனது நடிப்பைத் தொடர்ந்தார். இந்த வகையில் பேயை மையமாக வைத்து காமெடி படம் ஒன்றில் நிக்கிகல் ராணி சிவா உள்ளிட்ட இன்னும் சிலர் நடித்துள்ளார்கள்.

அந்தத் திரைப்படத்திற்கு இடியட் என்று பெயர் வைத்துள்ளார்கள். இத்திரைப்படத்தில் நிக்கிகல்ராணி ஆண் பேயாக நடித்துள்ளார். இதற்கு முன்பே நிக்கி கல்ராணி டார்லிங் காமெடி கலந்த பேய் திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நிக்கி கல்ராணி மற்றும் சிவா இருவரும் இணைந்து நடித்திருக்கும் இடியட் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.