தோட்டா தெறிக்க தெறிக்க ஆக்ஷன் ஹீரோவாக அதிரடி காட்டும் நடிகர் சசிகுமார்..! இணையத்தில் மிரட்டும் பகைவனுக்கு அருள்வாய் டீஸர்..!

சினிமாவில் நாடி நரம்புகளை புடைக்க வைக்கும் அளவிற்கு நாடோடிகள் திரைப்படத்தின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் தான் நடிகர் சசிகுமார் இவர் நடிகர் மட்டுமின்றி இயக்குனராகவும் பல்வேறு திரைப்படங்களை இயக்கி வெற்றி கண்டவர்.

அந்த வகையில் மினிமம் கேரண்டி நடிகராக வலம் வரும் நடிகர் சசிகுமார் சமீபகாலமாக இவருடைய திரைப்படங்கள் எதுவுமே பெரும் அளவிற்கு வெற்றி பெறவில்லை என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

அந்த வகையில் திருமணம் எனும் நிக்கா என்ற திரைப்படத்தை இயக்கிய அனீஸ் இயக்குனருடன் பகைவனுக்கு அருள்வாய் என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார் இத்திரைப்படத்தில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக வாணி போஜன் மற்றும் பிந்து மாதவி ஆகிய இருவருமே நடிக்க உள்ளார்கள்.

இவ்வாறு உருவாகும் இந்த திரைப் படத்தின் ஒளிப்பதிவாளராக கார்த்தி மற்றும் எடிட்டிங் வேலையை காசி விஸ்வநாதன், மற்றும் இசை  ஜிப்ரான் பங்கேற்பது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தின் ஸ்டண்ட் காட்சிகள் அனைத்தும் நூர் அவர்கள்தான் காட்சியமைத்து கொடுக்கப் போகிறாராம்.

மேலும் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஹரிஷ் பேரடி சதீஷ் நினசம் மேலும் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில்  நடிக்க உள்ளார்கள்.இவ்வாறு உருவாகும் இந்த திரைப் படத்தின் போஸ்டரைப் பார்த்தால் இது ஒரு கேங்க்ஸ்டர் திரைப் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்தவகையில் நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்த திரைப்படத்தின் டீசர் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment