ஸ்கெட்ச் போட்டு தூக்கிய சிறுத்தை சிவா..! கங்குவா படத்தை பார்த்து சூர்யா என்ன செய்தார் தெரியுமா.

Suriya’s Reaction After Watching Kanguva Movie: சிவா இயக்கத்தில் கங்குவா என்ற படத்தில் சூர்யா நடித்திருக்கும் நிலையில் இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது மேலும் விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரையிலும் இல்லாத அளவிற்கு சூர்யா கிட்டத்தட்ட 10 கெட்டப்புகளில் நடித்துள்ளார்.

பான் இந்திய படமாக வெளியாகும் இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக திஷா பதானி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி போன்ற ஏராளமான பிரபலங்கள் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து இறுதி கட்டப்பணிகள் நடைபெற்ற வருகிறது.

வேலை போனதால் மனோஜை வெளுத்து வாங்கும் ரோகினி.. மாப்பிள்ளை என்று கூட பார்க்காமல் அசிங்கப்படுத்தும் மீனாவின் அம்மா.. உண்மையை சொல்வாரா முத்து..

கோடை விடுமுறையில் கங்குவா வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் சில தினங்களுக்கு முன்பு சூர்யா கங்குவா படத்தினை பார்த்துள்ளார் அப்பொழுது தனக்கு படம் திருப்திகரமாக இருந்ததால் சிவாவை கட்டி தழுவி தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டாராம் சூர்யா.

இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால் இதுவரை நாம் வெளிவந்த சூர்யாவின் திரைப்படங்களில் எந்த திரைப்படத்திற்குமே சூர்யா இந்த அளவிற்கு ஹைப்பானதில்லை என கூறப்படுகிறது. ஆதலால் இந்த படத்தில் ஏதோ ஒரு சுவாரசியமான விஷயங்கள் உள்ளது சிவா எதையோ ஸ்கெட்ச் போட்டு சரியாக செய்துள்ளார் என்றும் தெரிகிறது.

காலையில் டிபன் சாப்பிடுவது போல் ஒரு பெண்… இரவு டின்னர் சாப்பிடுவது போல் ஒரு பெண்.. பிரப பிரபல இசையமைப்பாளரின் லட்சணத்தை கூறிய நடிகர்..

மேலும் அண்ணாத்த படத்தின் மூலம் கலவை விமர்சனத்தை பெற்ற சிவா கங்குவா மூலம் மீண்டும் தனது பெயரை காப்பாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கங்குவா படம் குறித்த மேலும் அப்டேட்டுகள் வெளியாக ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து  வருகிறார்கள். கங்குவா படத்தினை தொடர்ந்து சுதா கோங்குரா இயக்கம் படம் மற்றும் ராஜேஷ் ஓம் பிரகாஷ் இயக்கும் கர்ணா ஆகிய திரைப்படங்களில் சூர்யா நடிக்க உள்ளார்.