ஒரு சில நடிகைகள் தனது முதல் படத்தில் நடிக்கும் போதே தனது அழகினாலும், சிறந்த நடிப்புத் திறமையினாலும் எளிதில் பிரபலம் அடைந்து விடுவார்கள்.அந்த வகையில் தற்போது தென்னிந்திய சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை கௌரி கிஷன்.
இவர் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் வெளிவந்த 96 திரைப்படத்தின் மூலம் த்ரிஷாவின் சின்ன வயது பருவ பெண்ணாக நடித்திருந்தார். இதில் இவர் ஜானு கேரக்டரில் நடித்து இருந்தார். தற்போது வரையிலும் பலர் ஜானு என்று தான் ரசிகர்கள் அழைத்து வருகிறார்கள்.
இதனைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்திருந்தார். இதன் மூலம் இவருக்கு பல பாராட்டுகள் கிடைத்தது. தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கர்ணன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
தற்போது தமிழ்,மலையாளம் என்ற இரண்டு திரையுலகிலும் மாறி மாறி பல படங்களில் நடித்து அசத்தி வருகிறார். இவ்வாறு தனது நடிப்பு திறமையைனால் தொடர்ந்து பாராட்டு பெற்று வரும் கௌரி கிஷன் அதைத் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் என்று சோஷியல் மீடியாவில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில் சிங் நிற உடையில் தேவதை போல் இருக்கும் புகைப்படத்தையும், வீடியோவையும் வெளியிட்டு உள்ளார். என்னை பார்த்த ரசிகர்கள் ஆஹா ஓஹோ என்று வர்ணித்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.