கேரளாவை பூர்வீகமாக கொண்ட கௌரி கிஷன் தமிழகத்தில் தான் வளர்ந்தார். இவர் திரிஷா மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 திரைப்படத்தில் குட்டி ஜானகி என்ற கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார் அது மட்டுமல்லாமல் இவர் அறிமுகமான முதல் படத்திலேயே ரசிகர் மத்தியில் மிகவும் பிரபலமாகி விட்டார்.
அதன் பிறகு மாஸ்டர் திரைப்படத்தில் கல்லூரி மாணவியாக நடித்து மேலும் பிரபலமானார். விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற நிலையில் இந்த திரைப்படத்தில் ஒரு சிறிய தூணாக நடித்துள்ளார் கௌரி கிஷன். இப்படி முன்னணி நடிகர்களுடன் படத்தில் நடிக்கும் கௌரி கிஷன் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் சினிமாவில் தனக்கென ஒரு இடம் பிடித்த குட்டி ஜானு அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். பொதுவாக படங்களில் நடிக்க வாய்ப்பு கேட்டு சில நடிகைகள் நேர்த்தியான முறையில் புகைப்படங்களை வெளியிட்டு வருவதன் மூலம் பட வாய்ப்பு கேட்டு வருகிறார்கள்.
இப்படி இருக்கையில் நடிகை கௌரி கிஷனும் அதே யுக்தியை கையில் எடுத்துள்ளார். எந்த ஒரு திரைப்படத்திலும் சரி எந்த ஒரு புகைப்படத்திலும் சரி கவர்ச்சி காட்டாத கௌரி கிஷன் முதன் முறையாக கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் உங்க கிட்ட இதை நாங்க எதிர்பார்க்கவே இல்லை நீங்கள் ஹோம்லியாக இருந்தால் மிகவும் அழகாக இருக்கிறீர்கள் என்று அந்தப் புகைப்படத்தை பார்த்து புலம்பி வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்.