விஜய், விஜய் சேதுபதியை தொடர்ந்து ‘சின்ன தல’ யுடன் க்யூட் புகைப்படம் எடுத்துக்கொண்ட கௌரி கிஷன்.! லைக் மட்டுமே இவ்வளவா.? ஆச்சரியத்தில் ரசிகர்கள்.

தளபதி விஜய் நடிப்பில் கடந்த பொங்கலன்று வெளியான திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப் படத்தில் அவருடன் இணைந்து மாளவிகா, ஆண்ட்ரியா, சாந்தனு, விஜய்சேதுபதி, சுரேகா வாணி போன்ற ஜாம்பவான்கள் உடன் இணைந்து அவர்களுடன் நடித்தவர் தான் நடிகை கௌரி கிஷன்.

மாஸ்டர் திரைப்படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்து இருந்தாலும் அந்த ரோல் மிக சிறப்பான ஒரு ரோலாகவே அந்த படத்தில் பார்க்கப்பட்டது அதுபோல மாஸ்டர் திரைப்படத்திற்கு முன்பாக விஜய் சேதுபதியுடன் இணைந்து 96 என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இணையதளபக்கத்தில் படும் ஆக்டிவாக இருக்கும் கௌரி கிஷன்.

அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார் என்பது நாம் அறிந்த ஒன்று தான். அந்த வகையில் சென்னை அணியின் பெரிய தல தோனிக்கு பிறகு பல ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர் சின்ன தல ரெய்னா அவருடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

மேலும் அவர் பதிவு செய்திருந்தார் சின்ன தல யுடன் புகைப்படம் எடுப்பது எனது நீண்ட கால கனவு அது பலித்து விட்டது நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என தெரிவித்தார்.

கௌரி கிஷன் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து வருகிறார் அப்படி விஜய் விஜய் சேதுபதி தொடர்ந்து தனுஷ் நடித்து முடித்துள்ள கர்ணன் திரைப்படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்துள்ளாராம்.

Leave a Comment