biggboss4-9

2 promo!! எலிமினேஷனில் சிக்கிய ரம்யா பாண்டியன், ஷிவானி நாராயணன்!! இதோ வீடியோ.

today biggboss 4, 2 promo elimination list video viral:பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது வெளிவந்த இரண்டாவது ப்ரமோவில் கடந்து வந்த பாதை என்ற டாஸ்க் முடிவடைந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் தங்க தகுதி இல்லாத அடுத்த நாலு பேர் யார் என பிக்பாஸ் கேள்வி எழுப்புகிறார்.

அதற்கு அனைவரும் கலந்து ஆலோசித்து பின்னர் சம்யுக்தா வந்து அஜித், சிவானி நாராயணன்,  ரம்யா பாண்டியன் மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி போன்றோரின் வாழ்க்கையில் மற்றவர்களின் வாழ்க்கையில் நடந்த போராட்டங்கள் போல் இல்லை என அவர் கூறுகிறார்.

அவர் கூறியதற்கு பின் நடிகர் சுரேஷ் அவர் கூறியது ஏற்றுக்கொண்டார். மற்றவர்களின் முகம் சோர்ந்து போய் உள்ளது குறிப்பாக சிவானி நாராயணனின் முகம் மிகவும் சோகத்தில் இருந்தது.

சிவானி நாராயணனுக்கு என ரசிகர்கள் அதிகமாகவே உள்ளன. இவர் தினமும் மாலை நேரத்தில் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்தார். ஆனால் தற்போது பிக்பாஸ் வீட்டில் இருந்துகொண்டு எந்த ஒரு பர்ஃபார்மன்சும் செய்யாதது ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியது. மேலும் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளுங்கள் எனவும் கூறுகின்றனர்.

SP_Charan

அஜித் தனது தந்தையின் மறைவுக்கு வராதது குறித்து பேசிய SP சரண்.!! வைரலாகும் வீடியோ.

SP charan speaks about ajith video:பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்கள் உடல் நலக்குறைவால் கடந்த 25 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி காலமானார். இந்த சம்பவம் உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து இவரது உடல் அவரது பண்ணை வீட்டில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் பல திரை பிரபலங்கள் பாடகர் எஸ்பிபி அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நேரிலோ அல்லது சமூக வலைதளங்கள் மூலமோ தங்களது  வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர். நடிகர் விஜய் மயானம் வரை சென்று அஞ்சலி செலுத்தியது அனைவரையும் நெகிழ்ச்சி படுத்தியது.

ஆனால் தல அஜித் அஜித் இரங்கல் எதுவும் தெரிவிக்கவில்லை, நேரிலும் வந்து பார்க்கவில்லை எனவே ரசிகர்கள் அஜித்தின் இந்த செயலைக் குறித்து விமர்சித்தனர். அஜித் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு மாடலிங் பண்ணும்போது போட்டுக்க நல்ல சட்டை கூட இருக்காதாம். அவர் எஸ் பி பி யின் மகன் சரணின் சட்டைதான் அணிந்து கொள்வாராம்.

அஜித்தும் சரணும் பள்ளி பருவத்திலிருந்தே நெருங்கிய நண்பர்களாம் அதோடுமட்டுமல்லாமல் அஜித்தை முதன்முதலில் திரை உலகிற்கு  அறிமுகப்படுத்தியது எஸ்பிபி அவர்கள் தானாம். அஜித்தின் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருந்தவரை நேரில் பார்க்கவில்லை என அவரை பலர் விமர்சித்து வருகின்றனர்.

சரண் பேசுகையில் அஜீத் வராதது குறித்து என்ன கூறியுள்ளார் என பாருங்கள். அதாவது அஜித் எனக்கு ஒரு சிறந்த நண்பர், அவர் வந்து அப்பாவைப் பார்த்தால் என்ன பார்க்கவில்லை என்றால் என்ன? இந்த மாதிரி சூழலில் வரனும் என்று அவசியமில்லை. இப்போது இதைப் பற்றி பேச வேண்டியதுமில்லை, என கூறி அஜித் மீது வந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் எஸ் பி சரண். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

https://www.instagram.com/tv/CFreqA2lnih/?utm_source=ig_web_copy_link