தல அஜித்தை அப்படியே பின்பற்றும் ஜாக்கிசான் !! எந்த விஷயத்துக்காகன்னு பாருங்க

0

ackor jackie chan have same problem like ajith:தல அஜித் பொதுவாகவே எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பதில்லை என்பதை அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் கூட அஜித்தை கலாய்த்து விகடன் நாளிதழ் வாசகம் ஒன்றை வெளியிட்டிருந்தனர். இதனை அஜித் ரசிகர்கள் பெரிய அளவில் கண்டித்தனர்.

தல அஜித் சில நாட்களுக்கு முன்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அஜீத்தின் மேனேஜர் தவிர அவருக்கு வேறு யாரும் பிரதிநிதி இல்லை எனவே யாராவது தனது பெயரை சொல்லி மோசடி செய்தால் அதற்கு தான் காரணமில்லை என கூறியிருந்தார்.

அஜித்தின் பெயரை சொல்லி சிலர் மக்களை ஏமாற்றியது அவருக்கு தெரிய வர இந்த அறிக்கையை அவர் வெளியிட்டிருந்தார். அதுபோலவே உலக அளவில் பெயர்பெற்ற நடிகரான ஜாக்கிசான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது அவரின் நிறுவனத்தின் பெயரை கூறி யாரோ அடிக்கடி மோசடி செய்து உள்ளார்கள்.

அதனை அறிந்த ஜாக்கிசான் தனது நிறுவனத்திற்கு என சிலர் உள்ளனர். அவர்களை தவிர வேறு யாரும் தனது பெயரைப் பயன்படுத்தினால் அதை அவருக்கு தெரியப்படுத்தவும் என கூறியிருந்தார்.

இதனை அறிந்த அஜித் ரசிகர்கள் ஜாக்கிசானே அஜித்தை பின்பற்றுகிறார் என மகிழ்ச்சியில் உள்ளார்கள்.