karthik-tamil360newz

இணையதளத்தில் வைரலாகும் கார்த்திக் டயல் செய்த எண் !! மேக்கிங் வீடியோ.

karthik dial seitha en making video: இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான திரைப்படம்  விண்ணைதாண்டி வருவாயா. இத்திரைப்படத்தில் சிம்பு,  திரிஷா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர். மேலும் விடிவி கணேஷ், சமந்தா, நாக சைதன்யா போன்றோர்கள் நடித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் முழுக்க முழுக்க காதல் கதையை கொண்டு எடுக்கப்பட்டதாகும்.

உலகம் முழுதும் பரவி வரும் கொரோனா வைரஸின்காரணமாக தற்போது இந்தியாவிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, தற்போது கௌதம் மேனன் சிம்பு, த்ரிஷாவை வைத்து குறும்படம் ஒன்றை இயக்கியுள்ளார்.

இந்த குறும்படத்திற்கு அவர் கார்த்திக் டயல் செய்த எண் என்று பெயரிட்டுள்ளார். இந்த குறும்படத்தின் டீஸார் முன்னதாகவே வெளிவந்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தை அவர், அவர்களின் வீட்டில் இருந்தபடியே எடுத்துள்ளனர். எப்படி வீட்டில் இருந்தபடியே இந்த படத்தை எடுக்க முடியும் என ரசிகர்கள் பெரும் குழப்பத்தில்  இருந்து உள்ளனர்.

ரசிகர்களின் இந்த குழப்பத்தில் போக்குவதற்காக தற்போது கௌதம் மேனன் மற்றும் சிம்பு எப்படி இதை சாத்தியப்படுத்த போகிறோம் என அவர்கள் பேசிக்  கொண்டிருக்கிறார்கள். இந்த குறும் படத்தின் மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகி இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

trisha_tamil360newz

திரிஷா நடித்திருக்கும் கார்த்திக் டயல் செய்த எண் டீசர் இதோ.!

தமிழ் சினிமாவில் கடந்த 15 வருடங்களுக்கும் மேல் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை திரிஷா. இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இவர் அனைத்து முன்னனி நடிகர்களுடன் நடித்து சினிமா துறையில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார் என்பதை அனைவரும் அறிந்ததே.

கொரோனா வைரஸினால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் நடிகர், நடிகைகள் என அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இதனால் அவர்களுக்கு போர் அடிக்காமல் இருப்பதற்காக சமூகவலைதளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

அந்த வகையில் நடிகை திரிஷா தற்போது கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கார்த்தி டயல் செய்த எண் என்ற ஷார்ட் பிலிமில் நடித்துள்ளார். கொரோனா ஊரடங்கில் வீட்டில் இருந்து கொண்டே நடிகை த்ரிஷா இந்த ஷாட் பிலிமில் நடித்துள்ளார். இதனை பார்த்த அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்த குறும்படத்திற்கு கிடைத்த ஆதரவை பார்த்து நடிகை திரிஷா மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

நடிகை திரிஷா இந்த சாட்பிலிமிர்க்கு இந்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கும் என கொஞ்சம் கூட நினைத்துப் பார்க்க வில்லை என்றும் ஆதரவுக்கு நன்றி எனவும் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார். இந்த ஷாட் பிலிமின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது.

தற்போது அந்த டீசர் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

trisha

வீட்டில் போரடிகமால் இருக்க டிக்டாக்கில் இணைந்த த்ரிஷா.! முதல் வீடியோ எப்படி இருக்குன்னு பாருங்கள்.

சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை திரிஷா. இவர் 1999 ஆம் ஆண்டு ”ஜோடி” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

இதனைத்தொடர்ந்து அவர் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டதோடு மட்டுமல்லாமல் பல கோடி ரசிகர்களையும் கவர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இதை அடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக  வலம் வந்தார். தமிழ் சினிமாவில் மட்டும் தனது கவனத்தை செலுத்தமால் பிற மொழி படங்களிலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தற்பொழுது கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் 144 தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இத்தடை ஏப்ரல் 14 வரை நீட்டிகும் என மாநில அரசு தெரிவித்துள்ளது. இதனால் திரிஷா அவர்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளார். வீட்டில் போரடிக்காமல் இருப்பதற்காக டிக்டாக்கில் தன்னை இணைத்துக்கொண்டு முதல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் செம்ம சந்தோஷத்தில் உள்ளனர்.இனி டிக்டாக் தெறிக்கும் ஏன ரசிகர்கள் கூறிவருகின்றனர்.