திரிஷாவின் 37வது பிறந்த நாளை ஒட்டி இணையதளத்தை கதற விடும் அவரது ரசிகர்கள்.!! புகைப்படம் உள்ளே!!

Trisha’s 37th birthday celebrates her fans: நடிகை திரிஷா தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர். இவர் திரைப்படத்தில் நடிப்பதற்கு முன் 1999 ஆம் ஆண்டு மிஸ் சென்னை பட்டம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தமிழில் முதன் முதலில் ஜோடி என்ற திரைப் படத்தில் சிம்ரனுக்கு தோழியாக நடித்திருந்தார். ஆனால் அந்தளவுக்கு பிரபலமாகவில்லை. மேலும் இதனை தொடர்ந்து மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதினை பெற்றார்.

மேலும் இதனை தொடர்ந்து அவர் மனசெல்லாம், சாமி, லேசா லேசா, எனக்கு 20 உனக்கு 18, கில்லி, ஆயுத எழுத்து, திருப்பாச்சி, உனக்கும் எனக்கும் சம்திங் சம்திங், ஆறு, குருவி, மங்காத்தா, என்னை அறிந்தால், அரண்மனை 2, நாயகி போன்ற பல படங்களில் நடித்து தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி கொண்டார்.

மேலும் இவர் தற்போது உமன் சென்டர் கேரக்டரிலுள்ள படங்களிலும் நடித்து வருகிறார். பரமபதம் விளையாட்டு கர்ஜனை, ராங்கி போன்ற படங்கள் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து கடந்த வருடம் வெளியான 96 என்ற படத்தில் ஜானகி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே தக்கவைத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய  சினிமாவில் பொதுவாக நடிகைகள் என்றாலே சில வருடங்கள் ஹீரோயினாக நடித்துவிட்டு பின்பு அக்கா, அண்ணி போன்ற சப்போர்ட்டிங் கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்து விடுவார்கள். ஆனால் த்ரிஷா மட்டும் தான் 18 வருடங்களாக ஹீரோயினாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று பிறந்தநாள் காணும் த்ரிஷாவிற்கு அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அவர்கள் அனுப்பிய பிறந்தநாள் வாழ்த்து ட்விட்கள் சில.

trisha3-tamil360newz
trisha3-tamil360newz
trisha1-tamil360newz
trisha1-tamil360newz
TRISHA-tamil360newz
TRISHA-tamil360newz

Leave a Comment