வீட்டில் போரடிகமால் இருக்க டிக்டாக்கில் இணைந்த த்ரிஷா.! முதல் வீடியோ எப்படி இருக்குன்னு பாருங்கள்.

சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை திரிஷா. இவர் 1999 ஆம் ஆண்டு ”ஜோடி” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

இதனைத்தொடர்ந்து அவர் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டதோடு மட்டுமல்லாமல் பல கோடி ரசிகர்களையும் கவர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இதை அடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக  வலம் வந்தார். தமிழ் சினிமாவில் மட்டும் தனது கவனத்தை செலுத்தமால் பிற மொழி படங்களிலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தற்பொழுது கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் 144 தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இத்தடை ஏப்ரல் 14 வரை நீட்டிகும் என மாநில அரசு தெரிவித்துள்ளது. இதனால் திரிஷா அவர்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளார். வீட்டில் போரடிக்காமல் இருப்பதற்காக டிக்டாக்கில் தன்னை இணைத்துக்கொண்டு முதல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் செம்ம சந்தோஷத்தில் உள்ளனர்.இனி டிக்டாக் தெறிக்கும் ஏன ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

Leave a Comment