விஜய் டிவியில் தொடர்ந்து நான்கு வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். பிக் பாஸ் சீசன் போர் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தவர் நடிகை ரம்யா பாண்டியன். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெண் போட்டியாளர்களில் கடைசி வரையிலும் தாக்குப் பிடித்த நடிகை ரம்யா பாண்டியன்.
எனவே நிகழ்ச்சிக்குப் பிறகும் சிங்கப் பெண்ணாக அனைவர் மத்தியிலும் பிரபலமடைந்து வருகிறார். பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பல நடிகர், நடிகைகளுக்கு படங்களில் வாய்ப்பு கிடைக்கும் அந்த வகையில் நடிகை ரம்யா பாண்டியன் சூர்யா தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சி பிறகு சிறப்பு விருந்தினராக பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு எங்கு போனாலும் மேளதாளத்துடன் சிறப்பாக வரவேற்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் ரம்யா பாண்டியனின் ரசிகர்கள் ரம்யாவின் பெரிய கட்டவுட்டுக்கு பால் அபிஷேகம் பூ அபிஷேகம் என்று பலவற்றை செய்து வருகிறார்கள்.
அந்த வகையில் சமீபத்தில் நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற கடை திறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக ரம்யா பாண்டியன் மற்றும் பாலாஜி இருவரையும் அழைத்திருந்தார்கள்.
கடை திறப்பு விழாவிற்கு வந்திருந்த பாலாஜி மற்றும் ரம்யா பாண்டியன் இருவரின் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு அதில் ரம்யா பாண்டியன் சிக்கிக்கொண்டார் பிறகு பாலாஜி தோள் மேல் கை போட்டு பத்திரமாக காப்பாற்றியுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது.இதோ அந்த வீடியோ.
Genuine LOVE & SUPPORT ♥️ #BalajiMurugadoss #RamyaPandian pic.twitter.com/HRBqrqEP0w
— Nanbargale 𓃗 (@attraversiamo67) February 24, 2021