பாலாஜி செய்த விஷயத்துக்கு சரியான பதிலடி கொடுத்த சனம் ஷெட்டி.! பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகும் தொடரும் மோதல்.!

0

கடந்த நான்கு வருடங்களாக பிரபல விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சி பிரபலமடைந்தும் சினிமாவில் சரியான ஒரு அங்கீகாரம் கிடைக்காமல் தவித்து வரும் பலருக்கும் ஒரு நல்ல வாய்ப்பாக அமைகிறது. அந்தவகையில் இந்நிகழ்ச்சி சீசன் 4 கலந்துகொண்ட நடிகர், நடிகைகள் இதுவரையிலும் சோஷியல் மீடியாவில் சண்டை போட்டுக் கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

பிக்பாஸ் சீசன் 4-இல் பாலாஜி முருகதாஸ், ஜித்தன் ரமேஷ், ரம்யா பாண்டியன், அர்ச்சனா, அறந்தாங்கி நிஷா, ஷிவானி நாராயணன், சனம் செட்டி,ரியோ ராஜ்,சம்யுத்தா, சுரேஷ் சக்ரவர்த்தி,வேல்முருகன், அனிதா சம்பத், சுசித்ரா, ரேகா, சோமசேகர் ஆகியோர்கள் இந்நிகழ்ச்சியில்  கலந்து கொண்டார்கள்.

அந்தவகையில் வின்னராக ஆரி இந்நிகழ்ச்சியின் டைட்டில் மற்றும் 50 லட்ச ரூபாய் பணத்தை வெற்றிபெற்றார். இவரை தொடர்ந்து பாலாஜி முருகதாஸ் இரண்டாவது இடத்தை பிடித்தார். இந்த நிகழ்ச்சியில் ஆரியிடம் மிகவும் ஆக்ரோஷமாக பேசுவது அனைவரிடமும் சண்டை போட்டு வந்ததால் ரெட் கார்ட்  கொடுத்து இவரை வெளியில் அனுப்புங்கள் என கூறி வந்தார்கள்.

அந்த வகையில் ஷிவானியிடம் மிகவும் நெருக்கமாக பழகுவது, ஆரி மற்றும் சனம் ஷெட்டி போன்றவர்களிடம் கடுமையான வார்த்தைகளால் சண்டை போடுவது போன்றவற்றை வழக்கமாக வைத்திருந்தார். இவர் கண்டிப்பாக நிகழ்ச்சியிலிருந்து ரெட் கார்ட் மூலம் வெளியேறி விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எதிர்பாராத விதமாக இரண்டாவது போட்டியாளராக வெற்றி பெற்றார்.

இந்நிலையில் இந்நிகழ்ச்சிக்குப் பிறகு அனைத்து போட்டியாளர்களும் அவரவர்கள் வேலையை பார்த்துக் கொண்டிருந்த நிலையில் பிக்பாஸ் சீசன்4 வைத்து Behindwoods சார்பாக விருது வழங்கப்பட்டது. அந்த வகையில் பாலாஜிக்கும் வழங்கப்பட்டது.

ஆனால் பாலாஜி இந்நிகழ்ச்சிக்குப் பிறகு இதுவரையிலும் இவர் மேடையில் பேசிய 2 நிமிட வீடியோவை behindwoods நிறுவனம் வெளியிடவில்லை என்றும் அவதூறாக பல தவறான செய்திகளை சோசியல் மீடியாவில் பரப்புவதாகவும் இவ்வாறு தவறாக யாரையும் பேசக்கூடாது அனைவருக்கும் எதிர்காலம்  என்ற ஒன்று கூறி அந்த விருதை behindwoods நிறுவனத்திடம் ஒப்படைத்து விட்டார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் சனம் ஷெட்டி இந்நிகழ்ச்சியில் இருந்த பொழுது என்னையும் மற்ற பெண்ககளின் கேரக்டரை பற்றியும் பேசியபோது போட்டியாளர்களின் எதிர்காலத்தைப் பற்றி நினைத்துப் பார்க்கவில்லை? அவ்வாறு தவறான வார்த்தைகளை பேசும் பொழுது அல்லது என்னை அசிங்கப் படுத்திய போது இளம் பெண்களைப் பற்றி நீங்கள் யோசித்தீர்களா என்ன? காணாமல் போன உங்களின் இரண்டு நிமிட பெருமைக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று கூறிவுள்ளார்.