பாலாஜி முருகதாஸ்சும் ஓவியா ஆர்மியை சேர்ந்தவரா.? நடிகை ஓவியாவை பற்றி திடீரென பதிவிட என்ன காரணம்.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் நடிகைகளையும் பிரபலமடைந்தவர்களையும் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி போட்டியாளர்களாக தேர்ந்தெடுத்து 100 நாட்களில் விளையாட வைத்து. இதில் அவர்களின் உண்மை முகம், பண்பு எப்படி என்பதை தெள்ளத்தெளிவாக காட்டியது.

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது சீசன் சீசனாக நடைபெற்று வருகிறது இந்த நிகழ்ச்சியை நடிகர் கமலஹாசன் சீரும் சிறப்புமாக தொகுத்து வழங்கி வருகிறார்.

சமீபத்தில்தான் பிக்பாஸ் நான்காவது சீசன் வெற்றிகரமாக நிறைவேறியது. இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 1 இல் போட்டியாளராக அறிமுகமாகி ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்த நடிகை ஓவியாவிற்கு இன்று பிறந்தநாள் என்பதால் அவரை புகழ்ந்து தள்ளி ஓவியாவின் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

பிக்பாஸில் முதன்முதலாக ஆர்மி தொடங்கியது ஓவியாவுக்கு தான் அந்த அளவிற்கு இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் சமூக வலைதள பக்கங்களில் அதிகமாக இருக்கின்றனர். இவரை தொடர்ந்து தான்மற்ற சீசன்களில் மற்ற பிரபலங்களுக்கும் தனக்கு பிடித்தவர்களுக்கும் ரசிகர்கள் ஆர்மி அக்கவுண்டை ஒபன் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று பிறந்தநாள் காணும் ஓவியாவிற்கு பலரும் வாழ்த்துக்களை கூறிவருகின்றனர் ஒருசிலர் அட்வான்ஸ் ஆகவே பிறந்தநாள் வாழ்த்து கூறினர் அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 4 இல் விளையாண்டு ரன்னர் கப் பெற்ற “பாலாஜி முருகதாஸ்”.சமூக வலைதளப்பக்கத்தில் ஓவியாவிற்கு தனது அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

அவர் அட்வான்ஸ் “பிறந்தநாள் வாழ்த்துக்கள் மைடியர் அக்கா” என்றும் நீங்கள் என்றென்றும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று பாலாஜி குறிப்பிட்டார். இந்த செய்தியை அறிந்த ஓவியா இருந்து ரசிகர்கள் தற்போது பாலாஜிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் ஒரு சில கேள்விகளையும் கேட்டு வருகின்றனர் அந்த வகையில் ரசிகர்கள் தல நீங்களும் ஓவியா ஆர்மி சேர்ந்தவரா என கேட்டு வருகின்றனர்.

https://twitter.com/OfficialBalaji/status/1387383369533587458?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1387383369533587458%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.indiaglitz.com%2Fbalaji-murugadoss-birthday-wishes-to-oviya-tamilfont-news-285514

Leave a Comment