sandy

பாண்டியன் ஸ்டோர் முல்லை மற்றும் பிக்பாஸ் சாண்டி கேரவனில் அடிக்கும் கூத்து!! வைரலாகும் வீடியோ.!! செம்மையா என்ஜாய் பண்றாங்கப்பா..

dance master sandy and pandiyan store mullai video viral:விஜய் டிவியில் பொதுவாக வித்தியாசமான கதை உள்ள மற்றும் அனைவரையும் கவரும் வகையிலான சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்தவகையில் சீரியல் ஆரம்பித்த நாளிலிருந்து இன்று வரையிலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்.

இந்த சீரியல் தான் தற்பொழுது உள்ள குழந்தைகள், காதலர்கள் குடும்ப பெண்கள் முதியவர்கள் என அனைவருக்கும் பிடித்த ஒன்றாக திகழ்கிறது. இந்த சீரியல் மிகவும் ரசிகர்களை கவர்வதற்கு முக்கிய காரணம் அதில் நடித்து வரும் முல்லை மற்றும் கதிர் கேரக்டரில் உள்ள சித்ரா மற்றும் குமரன் தான்.

இவர்களின் ஒன்ஸ்கிரீன் லவ் இளசுகளை வெகுவாக கவர்ந்தது. இந்த சீரியலின் மூலம் இவர்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சீரியலில் நடிப்பவர்கள் புகைப்படம் மற்றும் வீடியோக்களை இணையதளத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள் அந்த வகையில் தற்போது . அந்த சீரியலில் நடிக்கும் முல்லை சாண்டி மாஸ்டருடன் இணைந்து மேயாத மான் என்ற திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த பாடல் ஒன்றுக்கு வேனில் டான்ஸ் ஆடும் வீடியோ வெளியாகியுள்ளது .

இதனை பார்க்க மிகவும் காமெடியாகவும்,  மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. தற்பொழுது இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.இதோ  இந்த வீடியோ.

https://www.instagram.com/p/BvDmfZiFfpM/?utm_source=ig_web_copy_link

-Bigg-Boss-4

பிக் பாஸ் சீசன் 4க்கு கமலுக்கே பாடம் எடுக்கும் சாண்டி!! வைரலாகும் வீடியோ.

biggboss seaon 4 video:கமல்ஹாசன் தொகுத்து வழங்கி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி 3 சீசன் முடிந்து தற்போது நான்காவது சீசன் தொடங்க உள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சி அக்டோபர் 4ஆம் தேதியில் ஒளிபரப்பப்படும் என பேசப்பட்டு வருகிறது.

இந்த நான்காவது பிக் பாஸ் கொரோனா காரணத்தினால் 80 நாட்களில் முடிக்கப்படும் என பேசப்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் 12 போட்டியாளர்கள் மட்டுமே பங்கேற்பார்கள் எனவும் கூறப்படுகிறது.

இந்த சீசனுக்கான 8 பங்கேற்பாளர்கள் உறுதிசெய்யப்பட்டது மேலும் சில பங்கேற்பாளர்கள் சில நாட்களில் உறுதி செய்யப்படும் எனவும் கூறப்படுகிறது. எது உண்மை எது பொய் என்பது மிக விரைவில் தெரியவரும் எனவும் ரசிகர்கள் கூறுகின்றனர்.

மேலும் இதற்கான ப்ரமோ வீடியோக்கள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த புரோமோ வீடியோவின் மேக்கிங் வீடியோவை விஜய் டிவி தொலைக்காட்சி தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இந்த மேக்கிங் வீடியோவில் டான்ஸ் மாஸ்டர் சாண்டி அவர்கள் கமலஹாசன் அவர்களுக்கு சொல்லித் தருவது போன்ற வீடியோ உள்ளது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.