நயன்தாராவுடன் குத்தாட்டம் போடும் அனிரூத்..! சாண்டி ஸ்டெப்பில் விக்னேஷ் சிவன் வெளியிட்ட வீடியோ..!

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் கௌரவமாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா இவர் சமீபத்தில் ஹீரோக்களுடன் நடிக்கும் திரைப்படத்தை காட்டிலும் சோலோ ஹீரோயினாக நடிக்கும் திரைப்படத்தில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

அந்த வகையில் இவருடைய நடிப்பில் வெளிவந்த பல்வேறு திரைப்படங்களும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் நடிகை நயன்தாரா அட்லி ஷாருக்கான் கூட்டணியில் ஒரு புதிய திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

அதே போல தமிழில் தன்னுடைய ஆசை காதலன் இயக்கும் காத்துவாக்குல 2 காதல் என்ற திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார் இத்திரைப்படத்தில் மற்றொரு கதாநாயகியாக நடிகை சமந்தாவும் நடித்து வருகிறார். இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தில் உள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் இத்திரைப்படத்தின் மீதமுள்ள படப்பிடிப்பு முடிவடைந்த உடன் மிக விரைவில் இத்திரைப்படத்தை வெளியிடப் போவதாகவும் இத்திரைப்படத்தில் படக்குழுவினர்கள் தெரிவித்துள்ளார்கள். அந்த வகையில்  இந்தப் படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளிவந்ததை தொடர்ந்து இரண்டாவது சிங்கல் பாடல் 18 ஆம் தேதி வெளியாக உள்ளது.

மேலும் இத்திரைப்படத்தின் பாடல் two two two என தொடங்கும் என தெரிவித்துள்ளார்கள். அதுமட்டுமில்லாமல் இந்த  பாடலுக்கு இளம் இசையமைப்பாளர் அனிருத் அவர்கள் இசையமைத்துள்ளார். மேலும் இந்த பாடலில் அனிருத் நடித்துள்ளதாகவும் விக்னேஷ் சிவன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

aniruth-1
aniruth-1

அந்த வகையில் அனிருத் ஏற்கனவே தலைவா,மாரி போன்ற பல்வேறு திரைப்படங்களில் இடம்பெற்ற பாடல்களில்  நடனமாடி  உள்ளார் ஆகையால் எந்த திரைப்படத்திலும் அவர் நடனமாடி இருக்கலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.

ஏற்கனவே விஜய் சேதுபதி சமந்தா நயன்தாரா என்ற உடன்  இந்த திரைப்படத்தின் எதிர்பார்ப்பு எகிறி கிடந்த நிலையில் தற்போது அனிருத்தும் இணைவதால் ரசிகர்கள் ஆவலுடன் இருந்து வருகிறார்கள்

Leave a Comment