எதிர்பாராதவிதமாக உலக நாயகன் கமலஹாசனின் விக்ரம் திரைப்படத்தில் இணையப் போகும் பிக் பாஸ் பிரபலம்..! இது லிஸ்டிலேயே இல்லையே..!

0

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ரசிகர்கள் விரும்பி பார்க்கும் ஒரு நிகழ்ச்சி தான் பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் சாண்டி. இவ்வாறு இந்த நிகழ்ச்சியில் இவர் செய்யும் குறும்பு தனத்திற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகி விட்டார்கள்.

இந்நிலையில் பல்வேறு திரைப்படங்களில் நடன  ஆசிரியராக பணியாற்றிய சாண்டி தற்போது உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து வரும்  விக்ரம் திரைப்படத்தில் இனைய உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இவ்வாறு இத்திரைப்படத்தை இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கி வருகிறார்.

இவ்வாறு உருவாகிவரும் இத்திரைப்படத்தில்  உலகநாயகன் கமலஹாசனுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில், ஷிவானி நாராயணன், மைனா நந்தினி போன்ற பல்வேறு பிரபலங்கள்  இணைந்துள்ளார்கள். மேலும் இத்திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு மிக சிறப்பாக முடிந்துள்ளதாக தகவல்கள் தெரிவித்திருந்தார்கள்.

vikram-1
vikram-1

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் பாண்டிச்சேரியில் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பணியை இந்த ஆண்டுக்குள் முடித்துவிட்டு கோடை விடுமுறையில் இத்திரைப்படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் நடன இயக்குனராக இத்திரைப்படத்தில் சாண்டி இணைந்துள்ளார். இப்படிப்பட்ட திரைப்படத்தில் வாய்ப்பு கொடுத்ததற்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு சாண்டி நன்றி தெரிவித்தது மட்டும் இன்றி இத்திரைப்படத்தின் மூலம் என்வாழ்க்கை மாறிவிடும் என நான் நினைக்கிறேன்.

பொதுவாக சாண்டி நடனம் என்றால் மக்களுக்கு மிகவும் பிடிக்கும் அந்த வகையில் இத்திரைப்பட பாடல்கள் கண்டிப்பாக மெகா கிடைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

sandy
sandy