பிக் பாஸ் சீசன் 4க்கு கமலுக்கே பாடம் எடுக்கும் சாண்டி!! வைரலாகும் வீடியோ.

0

biggboss seaon 4 video:கமல்ஹாசன் தொகுத்து வழங்கி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி 3 சீசன் முடிந்து தற்போது நான்காவது சீசன் தொடங்க உள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சி அக்டோபர் 4ஆம் தேதியில் ஒளிபரப்பப்படும் என பேசப்பட்டு வருகிறது.

இந்த நான்காவது பிக் பாஸ் கொரோனா காரணத்தினால் 80 நாட்களில் முடிக்கப்படும் என பேசப்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் 12 போட்டியாளர்கள் மட்டுமே பங்கேற்பார்கள் எனவும் கூறப்படுகிறது.

இந்த சீசனுக்கான 8 பங்கேற்பாளர்கள் உறுதிசெய்யப்பட்டது மேலும் சில பங்கேற்பாளர்கள் சில நாட்களில் உறுதி செய்யப்படும் எனவும் கூறப்படுகிறது. எது உண்மை எது பொய் என்பது மிக விரைவில் தெரியவரும் எனவும் ரசிகர்கள் கூறுகின்றனர்.

மேலும் இதற்கான ப்ரமோ வீடியோக்கள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த புரோமோ வீடியோவின் மேக்கிங் வீடியோவை விஜய் டிவி தொலைக்காட்சி தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இந்த மேக்கிங் வீடியோவில் டான்ஸ் மாஸ்டர் சாண்டி அவர்கள் கமலஹாசன் அவர்களுக்கு சொல்லித் தருவது போன்ற வீடியோ உள்ளது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.