கௌதம் மேனன் பிக் பாஸ் சாண்டி நடிப்பில் உருவாகியுள்ள 3:33 திரைப்படத்தின் டீஸர் இதோ.!

தமிழ் திரையுலகில் பிளாக்பஸ்டர் ஹிட்டடித்த பல திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் நடன இயக்குனராக பணியாற்றியவர் தான் சாண்டி இவர் நிறைய திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களை நடனம் ஆடவைத்து ரசிகர்களிடையே மிகவும் உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் பார்த்தால் இவர் நிறைய திரைப்படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியது மட்டுமல்லாமல் பல திரைப்படங்களில் இவரும் நடித்துள்ளார்.

இவர் நடன இயக்குனராக மட்டுமல்லாமல் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியிலும் போட்டியாளர்களில் ஒருவராக பங்கு பெற்றார் இவர் பிக் பாஸ் பிறகு நிறைய படங்களில் நடன இயக்குனராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் கூட சந்தானம் நடித்த பாரிஸ் ஜெயராஜ் என்ற திரைப்படத்தில் புளிமாங்கா புலிப் என்ற பாடலுக்கு மிகவும் அற்புதமாக நடனமாடி இருப்பார் மேலும் சாண்டி நடிப்பில் மிக அற்புதமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் 3:33 இந்த திரைப்படம் பேய் கதைகளம் கொண்ட திரைப்படமாக இருக்கும் என பலரும் கூறி வந்தார்கள்.

அதற்கு ஏற்றது போல் தற்போது இந்த திரைப்படத்தின் டீசர் சமூக வலைதள பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது சாண்டி மற்றும் இயக்குனர் கௌதம் மேனன் போன்ற பலரின் நடிப்பில் இந்த திரைப்படம் உருவாகி உள்ளது அது மட்டுமல்லாமல் இயக்குனர் கௌதம் மேனன் இந்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது மட்டும் தெரிகிறது.

மேலும் இந்த டீஸரை பார்த்த ஒரு சில ரசிகர்கள் படம் பார்ப்பதற்கு மிகவும் பயங்கரமாக இருக்கும் போல என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள் சாண்டி மிகவும் அற்புதமாக நடித்துள்ளார் என அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தும் வருகிறார்கள்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment