நடிகை ராசி கண்ணா தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். தெலுங்கு மட்டுமில்லாமல் ஹிந்தி, மலையாளம், தமிழ் என பல மொழிகளிலும் இவர் நடித்து வருகிறார்.
தமிழில் இவர் முதன்முதலாக இமைக்காநொடிகள் என்ற திரைப்படத்தின் மூலம் முதன் முதலாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தமிழில் அடங்கமறு அயோக்கியா, சங்கதமிழன் ஆகிய திரைப்படங்களில் நடித்து இருந்தார்.
தற்பொழுது இவர் தமிழில் துக்ளக் தர்பார், அரண்மனை 3, மேதாவி, சைத்தான் கே பச்சா, ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார் இதில் ஒரு சில திரைப்படங்கள் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் ராசிகன்னா எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக் கூடியவர் அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோ ஆகியவற்றை வெளியிட்டு வருவார். தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுவார் அதற்காக உடற்பயிற்சியும் செய்து வருவார்.
அந்த வகையில் தற்போது அடர்ந்த காட்டில் ஜிம் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் இதைப்பார்த்த ரசிகர்கள் அடர்ந்த காட்டில் கண்களுக்கு குளிர்ச்சியாக ஒர்க்அவுட் செய்கிறீர்களே என கமெண்ட் செய்துள்ளார்கள்.