உருவாக இருக்கிறது அரண்மனை-3 ஹீரோ ஹீரோயின் யார் தெரியுமா?

0

இயக்குனர் சுந்தர் சி தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் இவர் சீரியஸான கதையை வைத்துக்கொண்டு காமெடியாக திரைக்கதையை அமைத்து அந்த திரைப்படத்தை எப்படியாவது கரை சேர்த்து விடுவார். ஆனால் சுந்தர் சி சமீபத்தில் இயக்கிய ஆக்சன் திரைப்படம் தடம் தெரியாமல் போய்விட்டது.

ஆனால் சுந்தர் சி இயக்கிய அரண்மனை மற்றும் அரண்மனை 2 ஆகிய இரண்டு திரைப்படங்களும் நல்ல விமர்சனங்களை பெற்று நல்ல வரவேற்பையும் பெற்றது வசூலிலும் கல்லா கட்டியது, விஷாலை வைத்து ஆக்ஷன் திரைப்படத்தை இயக்கிய சுந்தர் சி க்கு விழுந்த அடியில் இருந்து மீண்டுவர அரண்மனை3 திரைப்படத்தை இயக்க இருக்கிறார்.

திரைப்படத்தை சன் பிக்சர் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது ஏற்கனவே சன் பிக்சர் நிறுவனம் தலைவர் 168 மற்றும் தனுஷ் 44 ஆகிய திரைப்படத்தை தயாரித்து வருகிறது. அரண்மனை மூன்றாவது பாகத்தில் ஹீரோவாக நடிகர் ஆர்யா மற்றும் சுந்தர் சி ஆகிய இருவரும் நடிக்க இருக்கிறார்கள் மேலும் நடிகையாக ராசிக் கண்ணாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது அதுமட்டுமில்லாமல் ஒரு முன்னணி நடிகை இடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்த திரைப்படத்தில் நடிகர் விவேக் யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடிக்க இருக்கிறார்கள் சத்யா இசையமைக்க இருக்கிறார், விரைவில் படத்தை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறுகிறார்கள்.