kayal

தனுஷ், நித்தியா மேனனாக மாறிய கயல் சீரியல் ப்ரோமோவை கலாய்க்கும் நெட்டிசன்கள்.! வைரலாகும் வீடியோ.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் தற்பொழுது டிஆர்பி-யில் முன்னணி வகித்து வரும் சீரியல் தான் கயல். இந்நிலையில் தற்பொழுது இந்த சீரியல் ப்ரோமோ வெளியாக இருக்கும் நிலையில் இதனை ரசிகர்கள் கேலி, கிண்டல் செய்து வருகிறார்கள்.

அதாவது பொதுவாக அனைத்து தொலைக்காட்சிகளின் சீரியலுக்கும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதில் முக்கியமாக சன் டிவியின் சீரியல்கள் தான் பலரையும் கவர்ந்து இருக்கிறது. இந்நிலையில் சன் டிவியில் கடந்த ஆண்டு அறிமுகமான சீரியல் தான் கயல். தன்னுடைய குடும்பத்திற்காக போராடும் ஒரு பெண்ணின் கதையை மையமாக வைத்த இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

தன்னுடைய கடுமையான உழைப்பினால் ஹீரோயின் கயல் தன்னுடைய ஒட்டுமொத்த குடும்பத்தினையும் பார்த்து வருகிறார். மேலும் கயல் மற்றும் அவருடைய குடும்ப உறவினர்களை பற்றியும் கயலை காதலிக்கும் சஞ்சீவ் பற்றியும் தான் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இவ்வாறு இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் தற்பொழுது இந்த சீரியலில் கயலின் தங்கை மாமியார் பேச்சைக் கேட்டு கயலுக்கு எதிராக திரும்பி இருக்கிறார்.

இதனால் வீட்டில் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது கயலின் மாமன் எப்படியாவது கயல் போட்ட சவாலில் வெற்றி வெற்றி பெறக் கூடாது என பல செய்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் இந்த சீரியலில் கயல் கேரக்டரில் சைத்ரா ரெட்டியும், ஹீரோவாக சஞ்சீவ் இருவரும் நடித்து வருகிறார்கள். இவருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது இந்நிலையில் கயல் சீரியலில் இருந்த ப்ரோமோ தற்போது ஒன்று வெளியாகியிருக்கிறது.

அதில் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திருச்சிற்றம்பலம் படத்தின் இடம்பெற்று இருந்த மேகம் கருக்காதா என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. இந்த பாடலுக்கு ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை பலரும் நடனமாடிய வீடியோக்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டிருந்தார்கள் இப்படிப்பட்ட நிலையில் தற்போது இந்த பாடலை தான் கயல் சீரியலில் ப்ரோமோவாக வெளியிட்டு இருக்கிறார்கள். அந்த ப்ரோமோ சோசியல் மீடியாவில் வைரலாக ரசிகர்கள் கேலியும் கிண்டலும் செய்து வருகிறார்கள்.