வாழ்க்கை ஒரு வட்டம் டா.! இங்க ஜெயிக்கிறவன் தோப்பான், தோக்குறவன் ஜெயிப்பான்.! இந்த வார TRP-யில் மண்ணை கவ்விய ரசிகரக்ளின் ஃபேவர்ட் சீரியல்கள்..

Serial Trp rating : பொழுதுபோக்கு என்றாலே சினிமா தான், ஒரு தரப்பு மக்கள் சினிமாவை விரும்பி பார்ப்பார்கள். ஆனால் இல்லத்தரசிகள் பொழுதுபோக்காக நினைப்பது சீரியலை மட்டும் தான் அவர்கள் அதிகமாக சீரியலை விரும்பி பார்ப்பார்கள் அதேபோல் சீரியலை இல்லத்தரசிகள் முதல் பெரியவர்கள் வயதானவர்கள் இளசுகள் என அனைவரும் விரும்பி பார்த்து வருகிறார்கள்.

அதேபோல் ஒவ்வொரு தொலைக்காட்சியும் சீரியலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் அந்த வகையில் எப்படியாவது டிஆர்பி யில் முதலிடம் கிடைக்க வேண்டும் என்பதற்காக அடிக்கடி புதிய புதிய சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள். ஒரு சீரியல் முன்னிலையில் இருக்கிறது என்பதை அறிய டிஆர்பி ரேட்டிங் வைத்து கணிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த வாரம் ரசிகர்கள் மத்தியில் எந்த அளவிற்கு எந்த சீரியல் மக்கள் மனதில் நல்ல வரவேற்பு பெற்றது என்பதை இங்கே காணலாம்.

கடந்த பல வாரங்களாக சன் தொலைக்காட்சியில் டிஆர்பி யில் முதலிடத்தில் இருந்து வந்த எதிர்நீச்சல் சீரியல் திடீரென சறுக்கி உள்ளது. முதலிடத்தில் தற்பொழுது புதிய சீரியல் ஆன சிங்கபென்னே என்ற சீரியல் தான்  இருந்து வருகிறது இந்த சீரியல் 10.79 புள்ளிகள் உடன் முதலிடத்தில் இருக்கிறது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் எப்பொழுதும் கயல் சீரியல் 10 புள்ளி 10 புள்ளிகள் உடன் இரண்டாவது இடத்திலும், சுந்தரி சீரியல் 9.27 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் இருக்கிறது.

ஆரம்பத்தில் இருந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த எதிர்நீச்சல் சீரியல் மாரிமுத்து மறைவிற்குப் பிறகு டிஆர்பி ரேட்டிங்கில் சர்வை சந்தித்து வருகிறது இந்த நிலையில் இந்த வாரம் 9.18 புள்ளிகளுடன் நான்காவது இடத்தை பிடித்துள்ளது அதேபோல் வானத்தைப்போல சீரியல் 8.88 புள்ளிகள் பெற்று ஐந்தாவது இடத்திலும் ஆறாவது  இடத்தில் இனியா சீரியல் 8.05 புள்ளிகள் உடன் தக்க வைத்துள்ளது.

ஏழாவது இடத்தில் ஆனந்த ராகம் சீரியல் 7.37 புள்ளிகள் உடன் இருக்கிறது அதேபோல் விஜய் தொலைக்காட்சி சீரியல் சிறையடிக்க ஆசை சீரியல் 7.21 ஒன்னு புள்ளிகளுடன் எட்டாவது இடத்திலும், ஒன்பதாம்  இடத்தில் 7 புள்ளி 03 புள்ளிகளுடன் பாக்கியலட்சுமி சீரியலும் பத்தாவது இடத்தில் ஆகா கல்யாணம் 6.6 புள்ளிகள் உடன் தன்னுடைய இடத்தை தக்க வைத்துள்ளது.