டிஆர்பி-யில் எதிர்நீச்சலை தூக்கிசாப்பிட்ட பிரபல சீரியல்.! என்னா ஆட்டம் கொஞ்ச நஞ்ச ஆட்டமா ஆடுனீங்க…

Serial : சின்னத்திரை தொடர்பான இந்த வார டிஆர்பி பட்டியலில் முதல் 10 இடத்தைப் எந்தத் தொடர் பெற்றுள்ளது என்று பார்க்கலாம்.
தற்போது சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்கள் அனைத்தும் இல்லத்தரசிகளை மட்டும்மின்றி இளம் தலைமுறையையும் கவரும் வண்ணம் எடுக்கப்பட்டு வருகிறது.

அதிலும் குறிப்பாக சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பெரும்பாலான தொடர்புகள் அனைத்தும் இளம் தலைமுறையினரையும் கவரும் வண்ணம் காட்சிகள் அமைக்கப்பட்டு தொடர்கள் எடுக்கப்படுகின்றன.  ஏனென்றால் இந்த வார டிஆர்பி யில் முதல் ஆறு இடத்தை பிடித்துள்ள தொடர்கள் அனைத்தும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் மட்டுமே உள்ளது.

முதலிடத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் தொடர் உள்ளது. இத்தொடரில் சைத்ரா ரெட்டி மற்றும் சஞ்சீவ் கதாபாத்திரங்களாக நடித்துள்ளார்கள்.கடந்த வாரம் முழுவதும் இவர்களின் திருமணக் காட்சி மட்டுமே இடம்பெற்றுள்ளது. எனவே இத்தொடர் டிஆர்பி பட்டியலில்
(12.02புள்ளிகள் ) முதலிடத்தை பெற்றுள்ளது.

2வது இடத்தில் “எதிர்நீச்சல் “தொடர் உள்ளது. திருச்செல்வம் இயக்கத்தில் வெளியான இத்தொடர் ஜனனி, குணசேகரன், ஆதிரை மற்றும் கரிகாலன் போன்ற கதாபாத்திரங்களின் நடிப்பு திறமை ரசிகர்களை கவர்ந்துள்ளது. எனவே இத்தொடர் டிஆர்பி பட்டியலில் 11.01 புள்ளிகளைப் பெற்று இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது.

3வது இடத்தில் “வானத்தைப் போல “தொடர் பிடித்துள்ளது. அண்ணன் தங்கை பாசத்தை வெளிப்படுத்தும் வகையிலும் திருமணத்திற்குப் பிறகு அண்ணன் தங்கை சந்திக்கும் சில பிரச்சனைகளை பற்றியும் எடுத்துக் கூறும் வகையில் இத்தொடர் அமைக்கப்பட்டுள்ளது. எனவே இத்தொடர் டிஆர்பி பட்டியலில் 10.39 புள்ளிகளை பெற்று மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது.

4வது இடத்தை “இனியா” தொடர் பெற்றுள்ளது. ஆல்யா மானசா கதாநாயகியாக நடிக்கும் இத்தொடர் இக்கால இளைஞர்களை கவரும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. டிஆர்பி பட்டியலில் 9.56 புள்ளிகளை பெற்று நான்காம் இடத்தை பிடித்துள்ளது.

5து இடத்தில் “சுந்தரி “தொடர் பெற்றுள்ளது. கேப்ரியல்லா கதாநாயகியாக நடிக்கும் இத்தொடர் பெண் கல்வி மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் எவ்வாறு துணிவோடு வாழ வேண்டும் என்பதையும் எடுத்துக் கூறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. எனவே டிஆர்பி பட்டியலில் 9.38 புள்ளிகளைப் பெற்று ஐந்தாம் இடத்தை பெற்றுள்ளது.

6வது இடத்தில் மிஸ்டர் மனைவி தொடர் பிடித்துள்ளது. இத்தொடர் வேலைக்குச் செல்லும் மனைவிகும் வீட்டில் இருந்து குடும்பத்தை பார்க்கும் கணவனுக்கும் இடையே ஏற்படும் ஒரு சில பிரச்சனைகளைப் பற்றி கூறும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது. எனவே டிஆர்பி பட்டியலில் 9.22 புள்ளிகளை பெற்று ஆறாவது இடத்தை பெற்றுள்ளது.

7வது இடத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “சிறகடிக்க ஆசை” என்ற தொடர் பெற்றுள்ளது. எனவே டிஆர்பி பட்டியலில் 7.39 புள்ளிகளை பெற்று ஏழாவது இடத்தை பிடித்துள்ளது.

8வது இடத்தில் குடும்பத் தலைவியின் சுயமரியாதை பற்றி கூறும்
“பாக்கியலட்சுமி” தொடர் உள்ளது. டிஆர்பி பட்டியலில் 7.76 புள்ளிகளை பெற்று எட்டாவது இடத்தை பிடித்துள்ளது.

9வது இடத்தில் “பாண்டியன் ஸ்டோர்”தொடர் உள்ளது. இத்தொடர் 6.50 புள்ளிகளை பெற்றுள்ளது.

10வது இடத்தில் ஜீ தமிழில் வெளியாகும் “கார்த்திகை தீபம்” என்ற தொடர் உள்ளது. இத்தொடரில் ஏழைப் பெண்ணொருத்தி பணக்கார வீட்டு மருமகளாக சந்திக்கும் சவால்களை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. டிஆர்பி பட்டியலில் 6.11 புள்ளிகளை பெற்று பத்தாவது இடத்தை பிடித்துள்ளது.

Leave a Comment