தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வரும் பரத் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு நடிகராக அறிமுகமானார். அதன் பிறகு தற்போது வரையிலும் ஏராளமான திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்த வகையில் இவர் தனது 50 வது படமான லவ் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இப்படிப்பட்ட நிலையில் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த படத்தில் நடிகர் பரத்துக்கு ஜோடியாக நடிகை வாணி போஜன் நடித்துள்ளார் மேலும் இந்த படத்தினை ஆர்பி பாலா இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. திருடர் திரைப்படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் எதிர்பாராமல் நடந்த மரணத்தை அடுத்து அந்த உடலை எப்படி அகற்றுவது என்பது குறித்து சிக்கலில் ஹீரோ இருப்பது தெரிய வருகிறது.
மேலும் மிகவும் விறுவிறுப்பான திரில்லர் படமாக லவ் திரைப்படம் உருவாகியுள்ள நிலையில் இது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த திரைப்படத்தில் நடிகர் பரத் மற்றும் வாணி போஜன் முதன்முறையாக ஜோடி போட்டு நடித்துள்ளார்கள்.
மேலும் விவேக் பிரசன்னா, பிக்பாஸ் புகழ் டேனி மற்றும் உள்ளிட்ட இன்னும் சில பிரபலங்களும் இந்த படத்தில் நடித்துள்ளார்கள். இந்நிலையில் இவர்களை தொடர்ந்து ரான்னி ரபேல் இசையில் ஜீபி முத்தையா ஒளிப்பதிவில் அஜய் மனோஜ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. இவ்வாறு திரில்லர் படமாக உருவாகியுள்ள பரத்தின் லவ் படத்தின் டீச ர் இதோ..