பட வாய்ப்பு இல்லை என்றாலும் பணத்தில் புரளும் பரத்.! எத்தனை கோடிக்கு சொந்தக்காரர் தெரியுமா.?

வெள்ளித்திரையில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வரும் முன்னணி நடிகர்களில் ஒருவர்தான் நடிகர் பரத் இவர் 2003 ஆம் ஆண்டு இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.அதனை தொடர்ந்து பார்த்தால் இவர் காதல்,செல்லமே,எம் மகன்,வெயில் போன்ற ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தார்.

இவ்வாறு இவர் நடித்த அனைத்து திரைப்படங்களுமே இவருக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய பெயரை வாங்கித் தந்தது ஆனால் அதை தக்க வைத்துக்கொள்ள நடிகர் பரத்திற்கு தெரியவில்லை என்று தான் கூற வேண்டும்.

ஒரு சில திரைப்படங்கள் நன்றாக போய்க் கொண்டிருக்கும் நேரத்தில் சரியான கதைகளை தேர்ந்தெடுக்காமல் நடித்ததால் இவரது மார்க்கெட் உடனே குறைந்து விட்டது மேலும் இவர் தற்பொழுது யாக்கை திரி, லவ்,முன்னறிவான் போன்ற ஒரு சில திரைப்படங்களை தேர்வு செய்து வைத்துள்ளாராம்.

இதைத் தொடர்ந்து இவர் ஒரு சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்க இருக்கிறாராம் இந்நிலையில் நடிகர் பரத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு என்பது பற்றி ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது அதன்படி பார்த்தால் நடிகர் பரத்தின் முழு சொத்து மதிப்பு ரூ.14 கோடி என்று இணையத்தில் இந்த தகவல் வைரலாகி வருகிறது.

bharath
bharath

மேலும் நடிகர் பரத் நடித்த மிரல் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை வாணி போஜன் நடித்திருப்பார் இந்த திரைப்படம் வெளிவந்த போது நடிகர் பரத் மீண்டும் சினிமாவில் நல்ல கதை அம்சம் கொண்ட திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்து விட்டார் போல என்றும் இவரது ரசிகர்கள் கமெண்ட் செய்து வந்ததை நாம் பார்த்திருப்போம்.

Leave a Comment