படம் முழுக்க பழம் போல் இருந்துக் கொண்டு கிளைமாக்ஸில் மெயின் வில்லனாக மிரட்டிய மூன்று ஹீரோக்கள்..

Tamil Actors: சமீப காலங்களாக தொடர்ந்து ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடைப்போட்டு வருகிறது. அந்த வகையில் 2023ஆம் ஆண்டு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த நிலையில் சினிமாவிற்கு பொன்னாண்டாக அமைந்தது.

இந்நிலையில் படத்தின் ஆரம்பத்தில் அப்பாவி போல் இருந்துக் கொண்டு போகப் போக உலக மகா வில்லத்தனத்தை வெளிப்படுத்திய மூன்று ஹீரோக்கள் குறித்து பார்க்கலாம்.

ராஜலட்சுமி குடும்பத்தை சமாளிக்க நடுராத்திரியில் ஐஸ்வர்யா பார்க்கும் வேலை.. மாட்டுனா அவ்வளவுதான் – ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோட்

வெந்து தணிந்தது காடு: 2022ஆம் ஆண்டு சிலம்பரசன் நடிப்பில் தமிழில் வெளியான திரைப்படம் தான் வெந்து தணிந்தது காடு இந்த படத்தில் ஏராளமான பிரபலங்கள் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர். அப்படி படத்தின் ஆரம்பத்தில் அப்புகுட்டி ஒரு அப்பாவி போல் இருப்பார். கடைசியில் சிம்புவுக்கு ட்விஸ்ட் வைக்கும் போது தான் அவர் எப்படிப்பட்ட கேடி என்பது தெரிய வரும்.

செல்லமே: விஷால், ரீமா சென் கூட்டணியில் 2004ஆம் ஆண்டு வெளியான செல்லமே திரைப்படத்தில் பரத் குழந்தையாக படத்தின் ஆரம்பத்தில் நடித்திருப்பார். பால் வடியும் முகத்தில் வெகுளியான சிரிப்புடன் இருந்த பரத் கடைசியில் இப்படத்தின் மெயின் வில்லனாக மாறி மிரட்டி இருப்பார்.

காதல் கொண்டேன்: தனுஷ், சோனியா அகர்வால், நாகேஷ், ஸ்ரீ காந்த், டேனியல் பாலாஜி போன்றவர்களின் கூட்டணியில் 2003ஆம் ஆண்டு வெளியான ரொமான்டிக் திரில்லர் திரைப்படம் தான் காதல் கொண்டேன். இப்படத்தில் தனுஷ் தொடக்கத்தில் இப்படிப்பட்ட ஒரு அப்பாவி ஜீவனை பார்த்ததே இல்லை என்பது போல் வெகுலியான சிரிப்புடன் நடித்திருந்திருப்பார். ஆனால் படத்தின் இறுதி கட்டத்தில் இப்படி ஒரு வில்லனை பார்த்து இருக்க மாட்டோம் என்பது போன்று பெர்ஃபார்மன்ஸ் கொடுத்து மிரட்டி இருப்பார்.

பணப்பெட்டியை தூக்கி சென்ற டைட்டிலுக்கு தகுதியான வெற்றி போட்டியாளர்.. ஏமாற்றத்தில் மக்கள்..

இவ்வாறு இந்த மூன்று நடிகர்களும் படத்தின் ஆரம்பத்தில் அப்பாவியாக நடித்து இறுதியில் வில்லனாக மிரட்டினார். இவர்கள்தான் டாப் 3 ஹீரோக்களாக இந்த லிஸ்டில் இடம் பெற்றுள்ளார்கள்.