பரத் நடித்துள்ள திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்.!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் நடிகர் பரத் இவர் ஆரம்பத்தில் பல வெற்றிப்படங்களை கொடுத்து இருந்தாலும் இடையில் ஒரு சில திரைப்படங்கள் இவருக்கு கை கொடுக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

தற்போது அவர் நடித்து வரும் ஒவ்வொரு திரைப்படமும் ஓரளவு நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது புதிய இயக்குனரான சக்திவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்த திரைப்படத்தில் பரத்துக்கு ஜோடியாக வாணி போஜன் அவர்கள் நடித்துள்ளார். இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருந்த தெய்வமகன் என்ற தொடரின் மூலம் பலரது மனதையும் கவர்ந்து உள்ளார். அவர்கள் ஜெய் நடிப்பில் வெளியான தமிழ் சென்ற வெப்சீரியஷில் படித்துள்ளார்.

bharath
bharath

அதன் பிறகு தற்போது நடித்து வரும் இந்த திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த திரைப்படத்தில் பாடல்கள் இல்லை என்றும் படத்தின் முழு கதையும் ஒரு காற்றாலை பண்ணையில் பின்னணியில் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தென்காசி மற்றும் அம்பாசமுத்திரம்,சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று உள்ளதாக கூறப்படுகிறது.இந்த நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

bharath
bharath

இதனை தொடர்ந்து நடிகர் பரத் அவர்கள் தனது 50 வது படத்தை கலைப்புலி தாணு அவர்கள் தயாரித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தை இயக்குனர் ஆர் பி பாலா அவர்கள் இயக்கி வருவதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்திலும் வாணி போஜன் தான் கதாநாயகி என்பது குறிப்பிடதக்கது.

Leave a Comment