ஆர்வக்கோளாறில் சூப்பர் ஹிட் கதையை தவறவிட்ட பாய்ஸ் பட நடிகர்.. கெட்டியாக பிடித்துக் கொண்ட தனுஷ்

0
dhanush-
dhanush-

தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு நடிகர் தனுஷ். இவர் தனது அண்ணன் செல்வாராகவன் இயக்கிய துள்ளுவது இளமை என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார் அன்றிலிருந்து இப்பொழுது வரை நல்ல கதைகளை தேர்வு செய்து படத்தின் கதைக்கு ஏற்றார்போல நடிப்பை வெளிப்படுத்தி வெற்றிகளை கொடுத்து வருகிறார்.

தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளிவந்த நானே வருவேன், திருச்சிற்றம்பலம் போன்ற படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து தனுஷ் கையில் கேப்டன் மில்லர், வாத்தி  மற்றும் ஒரு சில பெயரிடாத படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி இருக்கின்ற நிலையில் தனுஷ் படம் பற்றி ஒரு செய்தி வெளிவந்து உள்ளது. தனுஷ் கேரியரில் பல ஹிட் படங்கள் இருக்கின்றன அதில் ஒன்று திருவிளையாடல் ஆனால் உண்மையில் திருவிளையாடல் படத்தில் முதலில் நடிக்க இருந்தது வேறு ஒரு ஹீரோ தானாம் அவருக்கு அப்பொழுது அந்த கதை பிடிக்காததால் வேண்டாம் என சொல்ல பிறகு தனுஷ் அந்த படத்தில் ஹீரோவாக நடித்தார்.

அவருடன் இணைந்து ஸ்ரேயா சரண், பிரகாஷ்ராஜ் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்தனர். திருவிளையாடல் படம் முழுக்க முழுக்க காமெடி, ஆக்சன், செண்டிமெண்ட் அனைத்தும் கலந்திருந்ததால் படம் அப்பொழுது வெளியாகி வெற்றி பெற்றது. இந்த படத்தின் கதையை இயக்குனர் பூபதி பாண்டியன் முதிலில் நடிகர் பாரதிடம் கூறியுள்ளார். அப்பொழுது வேண்டாம் என கூறிவிட்டாராம்.

அதற்கான காரணம் தனக்காக அப்பொழுது அந்த கதை புரியாமல் போனதாக கூட இருக்கலாம் என பேட்டியில் வெளிப்படையாக கூறி புலம்பினார்.  விஷயத்தை கேட்ட ரசிகர்கள் நல்லவேளை திருவிளையாடல் படத்தில் நீங்கள் நடிக்காமல் போனது நல்லதா போச்சி என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.