MARTIN

அர்ஜுன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் ‘மார்ட்டின்’ பட டீசர்.!

தொடர்ந்து சினிமாவில் பல திரைப்படங்கள் வெளிவந்து வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியினை பெற்று வருகிறது. அந்த வகையில் தற்பொழுது மிகவும் பிரம்மாண்டமாக ஏபி அர்ஜுன இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் ‘மார்ட்டின்’ இந்த படத்தில் நடிகர் துருவா சார்ஜா ஹீரோவாக நடித்திருக்கும் நிலையில் இவரைத் தொடர்ந்து வைபவி சாண்டில்யா,  அன்வேஷி ஜெயின், சிக்கண்ணா, மாளவிகா அவினாஷ், அச்யுத் குமார், நிகிதின் தீர், நவாப் ஷா, ரோஹித் பகத் ஆகியவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தினை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான அர்ஜூன் கதை எழுதியுள்ள நிலையில் இந்த படத்தை வசாவி என்டர்பிரைஸ் சார்பில் தயாரிப்பாளர் உதய் கே மேத்தா தயாரித்துள்ளார். மிகவும் பிரம்மாண்டமாக இந்திய திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு சர்மா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா சமீபத்தில் பெங்களூர் ஓரியன் மாலில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. அந்த விழாவில் தயாரிப்பாளர் உதய் கே மேத்தா, நடிகர் அர்ஜுன், இயக்குனர் ஏபி அர்ஜுன், நாயகன் துருவா சர்ஜா, நாயகி வைபவி சாண்டில்யா,  அன்வேஷி ஜெயின் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

டீசரில் அதிக அளவு ஆக்ஷன் காட்சிகளுடன் உருவாகி இருக்கும் நிலையில் இந்த படத்தின் சிறிய அறிமுகத்தையும், நடிகர் துருவா சர்ஜன் நடித்திருக்கும் கதாபாத்திரமும் அமைந்துள்ளது. இந்த படம் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பழமொழிகளிலும் உருவாகி இருக்கும் நிலையில் டீசர் தற்பொழுது வெளியாகி ட்ரெண்டிங்காகி வருகிறது.