சூப்பர் ஹிட் படத்தை தவற விட்ட அஜித்.. வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட அர்ஜூன்..! எந்த படம் தெரியுமா.?

ajith and arjun
ajith and arjun

யாருடைய உதவியையும் பெறாமல் சினிமா உலகில் கால் தடம் பதித்து படிப்படியாக முன்னேறி தற்போது உச்ச நட்சத்திர நடிகர் என்ற அந்தஸ்தை பெற்று ஓடிக் கொண்டிருப்பவர் அஜித். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு போன்ற மூன்று படங்களுமே..

மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக வெற்றி அடைந்தன. இதனைத் தொடர்ந்து மகிழ் திருமேனியை லைக்கா நிறுவனம் தயாரிக்கும் தனது 62 ஆவது திரைப்படத்தை இயக்க நடிகர் அஜித் திட்டமிட்டு இருக்கிறார் அந்த படத்திற்கு விடாமுயற்சி என தற்போது பெயர் வைக்கப்பட்டுள்ளது.

தலைப்பு வைக்கப்பட்டு தற்போது 20 நாளுக்கு மேல் ஆகிய நிலையில் அடுத்ததாக எந்த ஒரு தகவலும் வெளிவராமல் இருப்பதால் விடாமுயற்சி படம் ட்ராப் ஆகிவிட்டதாக பலரும் கமெண்ட் அடித்து வருகின்றனர். ஆனால் உண்மை நிலவரம் என்னவென்றால்.. இந்த மாதம் கடைசியில் படபிடிப்பு நடத்த இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் அஜித்தை பற்றிய செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது அதாவது அஜித் சினிமா உலகில் பல நல்ல கதைகளை தவற விட்டிருக்கிறார் அதில் ஒன்று வேணு ரவிச்சந்திரன், சுராஜ் இயக்கிய மருதமலை திரைப்படம். இந்த படத்தில் முதலில் நடிக்க வேண்டியது.

ajith
ajith

அஜித் தானாம் சில காரணங்களால் அவர் தவறவிடவே பின் அர்ஜுன் இந்த படத்தில் நடித்தார் அவருடன் இணைந்து வடிவேலு, மீரா சோப்ரா, சரண், நாசர், ரகுவரன், முமைத்கான் மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் இந்த படத்தில் நடித்திருந்தனர் படம் வெளிவந்து அதிக நாட்கள் ஓடியதோடு மட்டுமல்லாமல் 56 கோடி வசூல் அள்ளி அசத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.