லியோ படத்தில் வெறும் ஆக்சன்கிங் மட்டும் இல்லை.? தரமான சம்பவம் செய்ய காத்திருக்கும் அர்ஜுன்.. சீக்ரெட்டை உடைத்த பிரபலம்…

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் அர்ஜுன் இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் அந்த கதாபாத்திரம் இந்த திரைப்படத்தில் மிகப்பெரிய அளவில் பேசப்படும் என்று தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது இதனால் ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.

ஏற்கனவே லியோ டைட்டில் புரோமோவில் பல சஸ்பென்ஸ்களை வைத்து ரசிகர்களை குழப்பம் அடைய வைத்த லோகேஷ் கனகராஜ் லியோ படத்தை தரமாக தனது பாணியில் உருவாக்கி வருகிறார். இதனை தொடர்ந்து லியோ திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், திரிஷா, பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்து வருகின்றனர்.

காஷ்மீரில் தொடங்கப்பட்டு உள்ள படப்பிடிப்பு தற்போது மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து லியோ திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் அர்ஜுன் அவர்கள் சமீபத்தில் ஒரு பேட்டி அளித்திருக்கிறார் அப்போது லியோ படத்தில் ஒரு தரமான சம்பவம் செய்ய காத்திருப்பதாக மறைமுகமாக சுட்டிக் காட்டி இருக்கிறார் இதனால் ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

பொதுவாக அர்ஜுன் படம் என்றாலே ஆக்ஷன் காட்சிகள் அதிகம் இருக்கும் அந்த வகையில் ரசிகர்கள் இவரை ஆக்சன் கிங் என்றும் அழைத்து வருகிறார்கள் இதனை தொடர்ந்து லியோ படத்தில் வெறும் ஆக்சன் கிங் மட்டும் இல்ல அதுக்கு மேல என்று கூறி இருக்கிறார் இதனால் லியோ படத்தில் ஒரு தரமான சம்பவம் செய்ய அர்ஜுன் ரெடியாகிவிட்டார் என்று கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து காஷ்மீரில் தற்போது படமாக்கப்பட்டு வரும் நிலையில் படக் குழுவினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது twitter பக்கத்தில் வெளியிட்டிருந்தார் இந்த புகைப்படம் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலானது மட்டுமல்லாமல் லியோ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் எகிற வைத்திருக்கிறது.

Leave a Comment