நாடி நரம்பில் தேசபக்தியை ஊற வைத்த ஐந்து திரைப்படங்கள்.! அதிலும் கமலுக்கு மட்டும் இரண்டு படம்.!

Independence day : இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்து கிட்டத்தட்ட 76 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது அதனை கொண்டாடும் விதமாக ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினமாக கொண்டாடப்பட்டு வருகிறோம். அந்த வகையில் இந்திய சுதந்திர தினத்தின் தியாக வரலாற்றை கொண்டாடும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் மற்றும் நிகழ்ச்சிகள் கொண்டாட்டங்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது.

சுதந்திர விழாவை மகிழ்ச்சியாக சிறப்பிக்கும் வகையில் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சினிமாவில் ஏராளமான தேச பக்தி படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் தேசிய உணர்ச்சியை அதிகப்படுத்தியுள்ளன அவற்றில் சில திரைப்படங்களை இங்கே காணலாம்.

வீரபாண்டிய கட்டபொம்மன்: 1959 ஆம் ஆண்டு சிவாஜி நடிப்பில் பி ஆர் பந்துலு இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் தான் வீரபாண்டிய கட்டபொம்மன் இந்த திரைப்படத்தில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாளையக்கார மன்னன் வீரபாண்டிய கட்டபொம்மனாக நடிகர் சிவாஜி கணேசன் நடித்த அசத்தியிருந்தார் கிட்டத்தட்ட வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகவே அந்த திரைப்படத்தில் வாழ்ந்தார். மேலும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள வரி, வட்டி, கிஷ்த்தி யாரை கேட்கிற வரி என்ற வசனம் இன்று வரை மக்களால் பேசப்பட்டு வருகிறது. இப்பொழுது வீரபாண்டிய கட்டபொம்மனை பார்த்தால் கூட ரசிகர்களுக்கு தேச உணர்ச்சி பெருக்கெடுக்கும்.

இந்தியன் : கமலஹாசன் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் தான் இந்தியன் இந்த திரைப்படத்தில் நடிகர் கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து அசத்தியிருந்தார். லஞ்சத்தால் போகிறது என்பதை மிகவும் அழகாக காட்டியிருந்தார் ஷங்கர் இந்த திரைப்படத்தில் சங்கர். இந்தியாவில் உள்ள ஊழல் அமைப்பு குறித்து ஒரு சுதந்திரப் போராட்ட வீரரின் வேதனையை பற்றி பேசும் திரைப்படமாக இந்தியன் 2 திரைப்படம் அமைந்திருந்தது மேலும் இந்த திரைப்படத்தின் இரண்டாவது பாகமும் தற்பொழுது உருவாகி வருகிறது.

ஜெய்ஹிந்த்: ஆக்ஷன் கிங் அர்ஜுன் இயக்கி நடித்த திரைப்படம் தான் ஜெய்ஹிந்த் இந்த திரைப்படம் 1994 ஆம் ஆண்டு வெளியாகியது. தானே இயக்கி அந்த திரைப்படத்தில் தானே நடித்து வெற்றி கண்டவர் அர்ஜுன். மேலும் ஒரு சாதாரண போலீஸ் அதிகாரி பயங்கரவாத கும்பலை எப்படி தடுக்கிறார் என்பது தான் இந்த திரைப்படத்தின் கதை. தேசப்பற்று திரைப்படம் என்றாலே முதல் லிஸ்டில் இன்று ஜெய்ஹிந்த் திரைப்படம் தான் இடம்பெறும் அந்த அளவு இந்த படம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தது.

ரோஜா: அரவிந்த்சாமி மதுபாலா ஜனகராஜ் வைஷ்ணவி ஆகியோர் நடிப்பில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் தான் ரோஜா இந்த திரைப்படத்தில் தேசியக் கொடியை தீவிரவாதி எரிக்கப் போவதும் அப்பொழுது அரவிந்த்சாமி தேசிய கொடியின் மரியாதையை காப்பாற்றுவதற்காக நெருப்பில் புரளுவதும் காட்சிகள் மெய்சிலிர்க்க வைத்தது.

ஹேராம்: கமல் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் தான் ஹேராம் இந்த திரைப்படம் 2000 ஆண்டு வெளியானது மேலும் இந்த திரைப்படத்தில் ஷாருக்கான், ஹேமா மாலினி, ராணி முகர்ஜி என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள் இந்த திரைப்படத்தில் மகாத்மா காந்தியை கோட்சே கொன்றது என்பது பற்றிய கதையாக எடுக்கப்பட்டிருந்தது இந்த திரைப்படம் தமிழ் சினிமா வரலாற்றில் பலருக்கு பாடம் கற்றுக் கொடுத்த முக்கிய திரைப்படமாக அமைந்தது.

Leave a Comment