அர்ஜுன் பிறந்தநாள் ஸ்பெஷலாக லியோ கேரக்டர் கிளிம்ப்ஸ்.. கலக்கும் தாஸ்

Actor Arjun Sarja: விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் லியோ திரைப்படத்தில் பிரபல முன்னணி நடிகர் அர்ஜுன் நடித்திருக்கும் நிலையில் இவருடைய பிறந்த நாளை முன்னிட்டு லியோ படத்தின் கேரக்டர் கிளிப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இன்னும் சில நாட்களில் லியோ படம் வெளியாக உள்ளது எனவே தொடர்ந்த லியோ படக் குழு அப்டேடை வெளியிட்டு வருகிறது. அப்படி இதற்கு விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு போஸ்டர்கள் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கள் பாடல் வெளியானது. இதனை அடுத்து சில தினங்களுக்கு முன்பு லியோ படத்தில் வில்லன் சஞ்சய் தத் பிறந்தநாள் ஸ்பெஷலாக  கிளிம்ஸ் வீடியோவை இயக்குனர் ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.

Read more : ஜெயிலர் படத்தில் பவர்ஃபுல் வில்லனாக நடித்த விநாயகம் எத்தனை தமிழ் திரைப்படத்தில் நடித்துள்ளார் தெரியுமா.!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் விஜய்யை தொடர்ந்து திரிஷா, சஞ்சய் தாத்தா, அர்ஜூன், கௌதமேனன், மிஷ்கின் உள்ளிட்ட பலரும் நடித்து வருகிறார்கள். கேங்ஸ்டர் படமாக உருவாகி வரும் நிலையில் கிட்டத்தட்ட 14 வருடங்களுக்குப் பிறகு இந்தப் படத்தின் மூலம் விஜய் த்ரிஷா கூட்டணி சேர்ந்துள்ளனர்.

டீசர்கள் போன்றவை ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் நிலையில் இதனை அடுத்து கடும் குளிரில் 52 நாட்கள் கடுமையான ஷூட்டிங்கில் நடந்ததை குறித்த வீடியோவையும் வெளியிட்டு இருந்தனர். பணியாற்றுவதற்காக சமைப்பவர்கள் முதல் சின்ன சின்ன உதவிகள் செய்பவர்கள் வரை அனைவரும் படாத பாடுபட்டார்கள்.

அர்ஜுன் இன்று னது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அர்ஜுன் கேரக்டர் குறித்த கிளிம்ப்ஸ்  வெளியாக உள்ளது. லியோ படத்தில் சஞ்சய் தத்தின் தம்பியாக அர்ஜுன் நடித்திருக்கும் நிலையில் இதனை நிரூபிக்கும் வகையில் தாஸ் என இவருடைய பெயர் முடிவடைகிறது. இவர் விஜய்யின் நண்பனா? துரோகியா? என அர்ஜுனின் கேரக்டர் குறித்த தகவலை வெளியிட இருக்கின்றனர்.

Read more : ஜெயிலர் படத்திற்கு கோடியில் சம்பளம் வாங்கிய யோகி பாபு.! எவ்வளவு தெரியுமா.?

Leave a Comment